பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றே ஒன்று 5

வேகம் அதனை விரைவில் செயலடங்கும்படி செய்து விடுகிறது. -

மனத்தில் ஆடை, அணி, உணவு, பதவி முதலிய பலவற்றை எண்ணுகிருேம். அது வேகமாகத் தாவுகிறது. இறைவன் என்ற முளையை அடித்து அன்பு என்னும் கயிற்றை அதன் கழுத்தில் கட்டிவிட்டால் என்ன ஆகும் : முளையை நன்ருக இறுக அடித்துவிட வேண்டும்: கயிற்றையும் பலமாகக் கட்டிவிட வேண்டும். அப் போது முன்போலவே மனம் ஆடை, அணி, உணவு முதலியவற்றை எண்ணினலும் அவற்றிலெல்லாம் இறைவ னுடைய தொடர்பும் இருந்து கொண்டே இருக்கும். முன்பு கண்பர்களே யெல்லாம் அழைத்துப் பல வகை உணவு சமைத்து விருந்து போட கினைக்கும் மனம், இப்போது அப்படிச் சமைத்து இறைவனுக்கு நிவேதனம் செய்து அடியார்களுக்குப் போட நினைக்கும். முன்பு சாதமாக உண்பதை எண்ணிய மனம் இப்போது பிரசாதமாக உண்ண எண்ணும். ஆடையை வாங்கி அணிந்தால் அடியாருக்கும் ஒன்று கொடுக்கச் சொல்லும். 'நான் இது செய்தேன்" என்று முன்பு சொன்னது மாறி, 'இறைவன் திருவருளால் இதைச் செய்ய அடியேல்ை முடிந்தது" என்று சொல்லச் செய்யும். - . - இப்படி மனம் பல பொருள்களையும் எண்ணிலுைம் அவற்றினூடே இறைவனுடைய நினைவு சுருதிபோடும். துன்பம் வந்தாலும், இன்பம் வந்தாலும் அவனே கினேக்கும் கிலே உண்டாகும்.

இந்த கிலே மேலும் மேலும் வளர்ந்து வந்தால், பக்தி முறுகி இறைவனுக்கும் நமக்கும் உள்ள தூரம் குறுகிவரும் நாம் பழகும் பொருள்களையும் எண்ணும் எண்ணங்களையும் நிகழும் நிகழ்ச்சிகளையும் இன்றவளுேடு தொடர்பு படுத்திப் படுத்தி நினைக்கும் கிலேயில் இருந்தது மாறி, முயற்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/15&oldid=548432" இலிருந்து மீள்விக்கப்பட்டது