பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றே ஒன்று 9

ஒன்றே நினைந்திருந்தேன் ; ஒன்றே துணிந்தொழிந்

தேன்; ஒன்றேளன் உள்ளத்தின் உள் அடைத்தேன்-ஒன்றே

- காண் ; கங்கையான், திங்கட் கதிர்முடியான், பெர்ங்குஒளிசேர் அங்கையாற்கு ஆள் ஆம் அது.

(ஒன்றையே பலவகையில் நினைத்திருந்தேன் ; ஒன்றையே துணிந்து மற்றவற்றை நீக்கினேன் ஒன்றையே என் உள்ளத்தி னுள்ளே மாருமல் அடைத்து வைத்தேன். அந்த ஒன்று, கங்கா தரனும், சந்திரசேகரனும், பொங்கும் ஒளியுடைய அனலைச் சேர்த் திய அழகிய கையுடையானுமாகிய இறைவனுக்கு ஆளாகும் அந்தப் பதவி. - -

நினைத்தல், துணிதல், உள்ளத்து அடைத்தல் என்ற மூன்றும் மூன்று கில்ேகள். ஒன்றை கினைத்தேன், வேறு ஒன்றைத் துணிந் தேன், பின்னும் ஒன்றை உள்அடைத்தேன் என்று மயங்காமல் ஒன்றே என்று ஏகாரத்தோடு சொன்னர்.

ஒன்றே அது என்று கூட்டுக. காண் : அசை. ஒளியென்றது ஆகு பெயராய்க் கனலேக் குறித்தது. அது அப்பதவி. அந்த ஒன்றுதான் ஆளாகும் அது என்ருர்.)

காரைக்காலம்மையார் அருளிச் செய்த அற்புதத் திரு வந்தாதியில் வரும் 11-ஆவது பாட்டு இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/19&oldid=548436" இலிருந்து மீள்விக்கப்பட்டது