பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஒன்றே ஒன்று

பின்பு மெல்ல மெல்லப் பகலவன் வான முகட்டி விருந்து இறங்கினன். மேற்றிசையின் விளிம்புக்கு இறங்கி வந்தான். பரந்த கிலப்பரப்பைத் தன் கதிரால் அளந்து ஆட்சி புரிந்த அவனே இப்போது யாரோ போகும்படி ஆணையிட்டு விட்டார்கள். அதனல் அவனுக்குத் திராத சினம் உண்டாகிவிட்டதோ! அவன் உருவத்தைப் பார்த் தால் ஒரே சிவப்பு. அவன் வீசிய சுடர்க்கற்றையும் குங்கு மக் கீற்றுக்கள். அவற்ருல் எழுந்த செவ்வொளியோ ரத்தக்குழம்பு போலச் செக்கச் செவேலென்று மேற்குத் திசையிலே படர்ந்திருக்கிறது.

மாலையின் உருவத்தை அந்தச் செக்கர் வானத்திலே அம்மையார் கண்டார். அவர் குங்குமக் குழம்பை நினைக்க வில்லை. குருதி வெள்ளத்தையும் கினைக்கவில்லை. 'எம்மெய் :யாயினும் ஒப்புமை கோடும்" கிலேயில் இருப்பவர் அல் லவா அவர்? அவருக்கு அப்போதும் இறைவனுடைய -கினேவுதான் எழுந்தது. 'ஆ' எம்பெருமானுடைய சடா பாரம் இப்படித்தானே செக்கச் செவேலென்று விரிந்திருக் கும்?" என்ற எண்ணமும் அதைேடு அவர் உள்ளக்கிழியில் அப்பெருமானுடைய சடைக்கற்றையும் விரிந்தன.

- · ~~-tDrăru?sår

- தாங்குஉருவே போலும் சடைக்கற்றை என்று பாடினர்.

செக்கர் வானம் இப்போது மறைந்துவிட்டது. மெல்ல மெல்ல இருள் பரவியது. இரவு தன் ஆட்சியைத் தொடங் கியது. கன்னங்கறேலென்று மைக்குழம்பு பூசியது போல வெளியிலே இருள் செறிந்தது. ஒரு நாளாகிய காலக் கூறுபாட்டில் க்ால், பகல், மாலை, இரவு என்பன உறுப்புக்கள். முன் மூன்றும் இறைவனுடைய அங்கங் களே கினைப்பூட்டின, இந்த இரவும் அப்படியே ஒன்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/22&oldid=548439" இலிருந்து மீள்விக்கப்பட்டது