பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்லமுதல் இரவுவரை 13.

நினைவுறுத்தியது. இப்போது நிறைந்து செறிந்து கிற்கும் இருட்டு இறைவனுடைய திருக்கழுத்தில் உள்ள கறுப்பை: கினைக்கச் செய்தது. அவன் இருள் மணிமிடற்றன் அல்லவா? - - -

மற்று அவற்கு வீங்கிருளே போலும் மிட்று. -

இறைவன் காலமே உருவாக நிற்பவன். ஞால மேபிறவேயவை வந்துபோம், காலமே' என்று மாணிக்க வாசகர் பாடினர். காலமே இறைவன் திருவுருவமாக இருந்தால் காலத்தின் கூறுபாடுகள் அவனுடைய திருவுரு வக் கூறுபாடுகளாக உள்ளவை என்று சொல்வது பொருத் தந்தானே?

காரைக்காலம்மையார் விரிந்த கா லத் ைத யே இறைவனுகக் கண்டார். ஒவ்வொரு நாளேயும் அவகைக் கண்டார். அந்த நாளிலும் காலே, பகல், மாலே, இரவு என்ற வேளேகளில் உண்டாகும் தோற்றங்களில் இறைவ னுடைய திருவுருவப் பகுதிகளைக் கண்டு களித்தார். காலை முதல் இரவு வரையில் இறைவனேயே எண்ணி வாழும் வாழ்வு அம்மையார் வாழ்வு. >

காலேயே போன்று இலங்கும் மேனி : கடும்பகலின் வேலையே போன்று இலங்கும் வெண்ணிறு;-மாலயின் தாங்குஉருவே போலும் சடைக்கற்றை: மற்று அவற்கு விங்கு இருளே போலும் மிடறு. - (அவனுக்குக் காலையைப் போல விளங்கும் கிருமேனி; கடுமையான நண்பகலாகிய வேளையைப் போல விளங்கும் இரு மேனியிற் பூசிய வெண்ணிறு; மாலே தாங்கும் செவ்வுருவைப் போலத் தோற்றும் சடையின் தொகுகி; மிக்க இருளைப் போலத் தோற்றும் நீலகண்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/23&oldid=548440" இலிருந்து மீள்விக்கப்பட்டது