பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புன்சொல்!

இறைவனிடம் மாருத பக்தியுடையவர் அவர். புலமை யும் கிரம்பியவர். இறைவனுடைய புகழைப் பலபடியாகப் பாடிப் போற்றினர். அவர் முடியுடை மன்னர்கள் மூவரில் ஒருவர். இறைவனுக்கு அன்பர் என்பது அவருடைய முதற் சிறப்பு: அடுத்தது அவர் புலமை நிரம்பியவர் என்ற சிறப்பு: அகற்கு அடுத்தபடிதான் அவர் மணிமுடி மன்னர் என்ற சிறப்பு கிற்கும். -

சேரமான் பெருமாள் என்பது அவர் பெயர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆகையால் சேரமான் பெருமாள் காயனர் என்று அவரை வழங்குவார்கள்.

அவரோடு, சிறிது கற்பத்னயாக உரையாடிப் பார்க்கலாம். -

"அழகான கவிகளைப் பாடுகிறீர்களே, உங்களுக்கு இப்படியெல்லாம் பாட யார் சொல்லித் தந்தார்கள்? பல பெரியவர்களுடைய தொடர்பும் நட்பும் உங்களுக்கு இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. புலவர் பெரு மக்களுடைய கூட்டத்தில் நீங்கள் ஒரு மணியைப்போல விளங்கியிருக்கவேண்டும்.

இந்த எளியேனேயா கேட்கிறீர்கள் ? நான் பாடு வதும் ஒரு பாட்டா'

“நல்ல இங்கவிகளைப் பாடியிருக்கிறீர்களே !

இங்கவியா! அதை நினைத்தாலே எனக்கு நகை உண்டாகிறது. நல்ல திங்கவி ஆல்ை என் விருப்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/25&oldid=548443" இலிருந்து மீள்விக்கப்பட்டது