பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புன்சொல் 17.

அடையும் என்று சொல்லுகிருர்கள். நான் அவற்றைத் தேடி ஓடுகிறேன். அவை என் கைக்கு அகப்படுவதில்லை. அவற்றைப் பெருமல் வருந்துகிறேன்.” - -

ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன்.

(விளக்கமான சொற்களையும் நல்ல பொருளையும் நான் பெறேன்.

ஒள்ளிய நல்ல; விளக்கமான ஒள்ளிய சொல்லும் ஒள்ளிய பொருளும் என்று கூட்டிப் பொருள் செய்யவேண்டும்.) -

'மற்றப் புலவர்கள் பாடலில் உள்ள சொற் பொரு ளுக்குக் குறைந்தவை அல்ல, உங்கள் பாடலில் உள்ள சொற் பொருள்.”

"எனக்கோ சொல்லும் தெரியாது; பொருளும் தெரி யாது. ஆலுைம் பாடவேண்டும் என்ற ஆசை ஒழியவில்லே. என் செய்வது! எவ்வளவோ பெரியவர்கள் பாடியிருக்கிருர் களே, அவர்களுடைய பாடல்களிலிருந்து சொல்லேயும் பொருளேயும் எடுக்கலாம் என்றுகூட இடையிலே ஒரு கினேப்பு வருகிறது. ஆல்ை அப்படி எடுத்துவைத்துப் பாடும் பாட்டை நான் மறைவிலே வைத்துக்கொண்டு தான் பாடலாம், திருட்டுச் சொத்தை ஊரவர் காண வெளியிலே கொண்டு வந்தால் திருட்டுத்தனம் தெரிந்து விடும் அல்லவா? சொல்லேயும் பொருளையும் பிறரிடமிருந்து திருடிப் பாட்டுப் பாடி வெளியில் விட்டால் மற்றவர்கள் ஒருகால் கவனிக்காமல் போகலாம். ஆனால் இந்தக் கவிகள் சும்மா இருப்பார்களா? இந்தச் சொல் இன்ன புலவருடை யது. இந்தத் தொடர் இன்ன நூலில் வருவது என்று அக்கு வேறு, ஆணி வேருகப் பிரித்து அவர்கள் என் மானத்தை வாங்கிவிட மாட்டார்களா ? .

있 - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/27&oldid=548445" இலிருந்து மீள்விக்கப்பட்டது