பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஒன்றே ஒன்று.

உரைத்தார் உரைத்த கள்ளிய புக்காற் கவிகள் ஒட்டார். (பாடியவர்கள் பாடிய சொல்ல்ேயும் பொருளையும் கிருடப் புகுந்தால், கவிஞர் அவ்வாறு செய்ய விட மாட்டார்கள்.

உரைத்தார் - இங்கவிகளைப் பாடியவர். உரைத்த சொன்ன சொல்லையும் பொருளேயும்; வினையாலணையும் பெயர். கள்ளிய திருட. ஒட்டார் - விட மாட்டார்கள்.)

அவர் திருடுவாரா?. ஆலுைம் ஒரு கிலேயில், 'நாம் ஆண்டவனேத் துதிப்பதுதானே முக்கியம்: பிறர் கொய்து தந்த மலர்ைக் கோத்து அணிவிப்பது போல நாமும் பிறர் தேடிவைத்திருக்கும் சொல்லேயும் பொருளேயும் எடுத்துப் பாடலாமே. நாம் பெரும் புலவன் என்ற சிறப்பைப் பெற வேண்டுமா? இறைவனே வாயாரப் பாடவேண்டும். அதற்கு இப்படிச் செய்யலாம்" என்று ஒரு கால் தோன்றிலுைம் அதைச் செய்ய முடியாது. ஊரில் உள்ள புலவர்கள் திருட் டைக் கண்டு பிடித்துப் பழி துாற்றுவார்கள். புலவர்கள் பழிக்கும்படி ஒரு காரியத்தைச் செய்தால் அதை இறை வன்தான் ஏற்றுக்கொள்வாளு?

உங்கள் வாக்கைப்பற்றி நீங்கள் எப்படித்தான் எண்ணியிருக்கிறீர்கள்?

'என் பாட்டு இறைவனுக்கு ஏற்றது அன்று. எத் தனயோ பெரியபக்தர்களும் புலவர்களும் பாடிய பாடல் களைக் கேட்டுத் திருவுள்ளம் மகிழ்ந்த பெருமான் அவன். அவனுக்கு என் புன்சொல் எம்மாத்திரம்? என் கவிகள் அவனற் கொள்ளப்பெறும் தகுதியுடையன அல்ல என் பது எனக்கு நன்ருகத் தெரியும். -

'அப்படியால்ை நீங்கள் ஏன் பாடினர்கள்? "ஆசையினல் பாடினேன்."

அவற்றை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று தெரிந்தும் ஏன் பாடினிர்கள்?" .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/28&oldid=548446" இலிருந்து மீள்விக்கப்பட்டது