பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புன்சொல் 19

"அப்படி இல்லை. அவன் ஏற்றுக்கொள்வதற்குரிய தகுதி இவற்றில் இல்லை என்றேனே அன்றி, அவன் ஏற் றுக்கொள்ளமாட்டான் என்று சொல்லவில்லையே!”

“இரண்டும் ஒன்றுதானே?" - 'இல்லை, இல்லை; என் பாட்டுக்குத் தகுதியிருந்து அவன் ஏற்றுக்கொண்டால், அது என் பெருமையைக் காட்டும். தகுதியில்லாமல் ஏற்றுக்கொண்டால் அது அவன் கருணையைக் காட்டும். கருணை வடிவமான எம் பெருமான் என் பாட்டில் தகுதி இல்லையாயினும் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு. உண்டாயிற்று.' "அந்த நம்பிக்கையை உண்டாக்க ஏதேனும் காரணம் உண்டா ? -

‘எம்பெருமான் அன்று பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்டான். வேறு யாரும் உண்தை நஞ்சை அவன் எற்று உண்டான். கொடிய நஞ்சையே அமுதாக எற்றுக் கொண்ட இறைவன் என் கவிகளையும் என் ஆசை கருதி ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை எழுந்தது."

சேரமான் பெருமாள் காயனர் இப்படியெல்லாம் நினைத்து ஒரு பாட்டுப் பாடினர், சிவ பெருமானேயே பார்த்து, "நான் அறிவு தெளிந்தவர்களோடு சேர்ந்து பயில வில்லை. நல்ல சொல்லும் பொருளும் அவர்களுடைய சேர்க்கையாலோ, நூலறிவாலோ பெறவில்லை. பிறர் வாக்கிலிருந்து எடுத்தால் கவிஞர் விடமாட்டார்கள். நான் பாடுவன் தகுதியற்ற புன் சொற்களே, ஆயினும் கடல் நஞ்சை உண்டவனே! நீ ஏற்றுக் கொண்டருள வேண்டும்” என்று பாடினர். , - . . . . . . -

தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன்; திங்கவி பாடல்உற்றேன்! ஒள்ளிய சொல்லும் பொருளும்

பெறேன்; உரைத் தார்உரைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/29&oldid=548447" இலிருந்து மீள்விக்கப்பட்டது