பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிலியின் வேதனை

'நேற்று இரவு எவ்வளவு நேரம் பேசிக்கொண் டிருந்தாள்! சில நாளாக ஏதோ மாதிரி இருக்கிருளே என்று எண்ணியிருந்த எனக்கு அப்போது பெருமகிழ்ச்சி உண்டாயிற்று. மனம் விட்டுப் பேசுவதாகவே எண்ணி னேன். ஊர்ச் செய்திகளைப் பேசினேம். உலகத்துச் செய்திகளைப் பேசினேம். அயலிலே உள்ள நாட்டுக்குப் போகவேண்டுமானல் இடையிலே உள்ள பாலையைக் கடக்கவேண்டும் என்று சொன்னேன். அந்த வழியைப் பற்றி விரிவாகச் சொல்லச் சொன்னுள். அவள் அவ் வழியே செல்ல கினைத்திருக்கிருள் என்பது அப்போது எனக்குக் கொஞ்சங்கூடத் தெரியவில்லையே! ஏமாந்து போய்விட்டேனே!" -

இப்படிச் செவிலித்தாய் புலம்பினள். அந்த வீட்டில் வளர்ந்த இளம் பெண், யாருடனும் சொல்லாமல் தன் காத லனுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டாள். இந்தச் செய்தி அவள் உயிர்த்தோழி ஒருத்திக்குத்தான் முன்பே தெரியும். மற்றவர்கள் விடிந்த பிறகுதான் உணர்ந்தார்கள்.

அந்தப் பெண்ணும் அவளுடைய காதலனும் சில கால மாகவே யாரும் அறியாமல் சக்தித்து அளவளாவி வந்தார் கள். அறிவு, அழகு, திரு, பண்பு ஆகியவற்ருல் சிறந்த காளை அவன். அவளும் அவனுக்கு ஏற்ற தகுதியுடைய வள். இருவரும் மனம் ஒத்துக் காதல் புரிந்தது வியப்பன்று. அவர்களுடைய காதல் ஒரு நாளேக்கு ஒருநாள் உரம்பெற்று. வளர்ந்தது. மறைவாக அளவளாவுவதால் மெல்லிய லாகிய அவளுக்கு அச்சம் இருந்தது. சந்திக்கும் நேரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/31&oldid=548449" இலிருந்து மீள்விக்கப்பட்டது