பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஒன்றே ஒன்று

தைக் காட்டிலும் அவனேப் பிரிந்திருக்கும் நேரம் பெரிதாக இருந்தது. அதலுைம் அவளுக்கு வேதனே உண்டாயிற்று. இதற்கு மாற்று என்ன? திருமணம் செய்துகொள்வது தான். பெரியவர்களே அனுப்பி அவளே மணம் பேசும்படி செய்தால் அவளுடைய தாய் தந்தையர் ஒப்புக்கொள்ள லாம்; பிறகு திருமணம் நடைபெறக்கூடும். அந்தப் பெண்ணினுடைய தோழிக்கு இந்த இருவரும் களவுக் காதல் புரிவது தெரியும். அவள் இவர்களுக்குத் துணையாக கின்று உதவி வந்தாள். -

காதலியின் தாய் தந்தையர் அவளே வேறு யாருக்கோ திருமணம் செய்துகொடுப்பதாக எண்ணியிருந்தார்கள். இதைத் தோழி அறிந்தாள். காதலன் மணம் பேச யாரை யேனும் அனுப்பினல் அவர்கள் மறுத்தாலும் மறுத்துவிடு வார்கள் என்ற ஐயம் அவளுக்கு உண்டாயிற்று. உறுதி யாக அந்தப் பெண்ணே அவளுடைய காதலனுக்கு அளிப் பார்கள் என்று தெரிந்தால் மணம் பேசும்படி அந்த ஆணழகனிடம் சொல்லலாம். அந்த உறுதிதான் இல்லையே!

இந்த நிலையில் என்ன செய்வது? அவளே யாரும் அறியாமல் காதலன் தன் ஊருக்கே அழைத்துச் சென்று அங்கே மணம் செய்துகொள்வதுதான் தக்க செயல்; ந்டக்கக்கூடிய காரியம்.

தோழிதான் இந்தத் தந்திரத்தைக் காதலர் இருவரிட மும் தெரிவித்தர்ள். காதலன் உடம்பட்டான். அந்த இளம் பெண்ணும் அவனுடன் செல்ல ஒருப்பட்டாள்.

ஒருநாள் விடியற்காலயில் காதலன் தன் காதலியை அழைத்துக்கொண்டு போய்விட்டான். காலேயில் எழுந்த வுடன் தம் வீட்டில் அப்பெண்ணக் காணுமல் யாவரும் தேடினர்கள். தோழி மெல்ல மெல்ல உண்மையை வெளியிட்டாள். அவளுடைய காதலன் இன்னன் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/32&oldid=548450" இலிருந்து மீள்விக்கப்பட்டது