பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிலியின் வேதனே 23.

பதை அறிந்து திருமணத்துக்குத் தாம் இசையாமையால் தான் அவள் அவனுடன் போளுள் என்பதை வீட்டில் உள்ளார் தெரிந்துகொண்டனர். -

செவிலி அப்போது தான் வளர்த்த பெண்ணின் பிரிவி ல்ை வருந்தலானள். ' அந்தக் கடுமையான பாலே நிலத் தில் எப்படிப் போவாள்? நடுவில் தங்கவேண்டுமானல் எங்கே தங்குவாள்? பாலே நிலத்தில் வாழ்பவர்கள் வீட்டில் விருந்தினராகத் தங்குவாளா?" என்று எண்ணி எண்ணி அங்கலாய்க்கிருள்.

அந்த இளம் பெண், மிக்க மென்மையுடைவள்; பூம் புனத்தின் நிழலில் ஒயிலாக நடமாடும் மயில்போன்ற சர்யலே உடையவள். அவள் மென்மை மயிலே ஒத்திருந்தது மட்டும் அல்ல. நீண்ட கூந்தல விரித்துவிட்டால் மயி லாகவே தோற்றுவாள். தன் கையாலே வாரிப் பின்னி அலங்காரம் செய்திருக்கிருள் செவிலி.

புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை. (புனம்-முல்லை நிலம். சாயல்-மென்மை. பூங்குழல்-பூவை யணிந்த கூந்தல். ம்டங்தை: பருவத்தைக்குறியாமல் பெண் என் னும் துணையாய் நின்றது.)

அவளுக்கு அந்த வீட்டிலே வாழப் பிடிக்கவில்லையா? கிறை செல்வம் உடைய வீடு அது. அவளுக்கு ஏதாவது குறை உண்டா? உணவில்ை குறைவா? உடையால் குறைவா? அணிகளுக்குக் குறைவா! அவள் எது வேண்டுமென்று கேட்கிருளோ அதனை உடனே வாங்கி அளித்தார்கள். மனை நிறைந்த செல்வம் இருக்கும்போது அதன் விரும்பாமல் அவள் இப்போது போய்விட்டாள்.

அவளைப் பெற்றெடுத்த தாய் இருக்கிருள்; தங்தை இருக்கிருர் கண்ணுள் மணியைப்போலப் பாதுகாத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/33&oldid=548452" இலிருந்து மீள்விக்கப்பட்டது