பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஒன்றே ஒன்று

வெவ்வினை என்றது வழிபறித்தல், அடித்தல், கொல்லுதல் முதலியவற்றை, இவை பாலே நில மாக்களாகிய வேடர்களுக்கு இயல்பு. துடி உடுக்கை, வெரீஇ - வெருவி ; அஞ்சி. மெய் - உடம்பு, விகிர் எறிதல் நடுங்குதல். செவ்வி - இயல்பு. செவ் வித்து - இயல்புடையது.

கானத்தின் பகுதி இத்தகையது என்று சொல்கிருள்.) வெயிலுக்கு ஒதுங்கவும் வேடருக்கு அஞ்சி ஒடி ஒளிய வும் அங்கே மரங்கள் அடர்ந்த இடம் ஏதேனும் இருக் குமா? பாலை நிலத்தில் அதற்கு இடம் இல்லை. மரங்கள் அடர்த்தியாக வளர்வதற்கு அங்கே ஈரம் எது? ஆனலும் பேருக்குச் சில மரங்கள் அங்கே உண்டு. சில மரங்களில் முள் வேறு இலை வேருக இருக்கும். இலேயே முள்ளாக இருக்கும் மரம் ஒன்று இருக்கிறது : சச்சமரத்தின் இலை நுனி முள்தானே? முள்ளிலை சந்து பாலே நிலத்தில் இருக் கிறது. அது என்ன கிழல்ேத் தரப் போகிறது? இலவமரம் பாலே நிலத்தில் வளரும். அதன் அடி மரமெல்லாம் உலர்ந்து போய் இருக்கும். மழையில்லாத பாலையில் அது உயிர் வைத்துக் கொண்டிருப்பதே பெரிதல்லவா? விளா மரங்களும் அங்கங்கே கண்ணில் படும். இந்த மரங்கள் அடர்ந்து செறிந்து வளர்வதில்லை. இங்கொன்றும் அங் கொன்றுமாக இருக்கும். ஒரு மரத்துக்கும் மற்ருெரு மரத் துக்கும் பரந்த வெளி இடையில் இருக்கும். -

முள் இல் ஈந்தும் முளிதாள் இலவமும் வெள்ளிலும் பரந்த தெள்ளிடை மருங்கில். . . . . (முள்ளே நுனியிலேயுடைய இலைகள்ேப் பெற்ற ஈச்ச மரமும், உலர்ந்த அடிமரத்தையுடைய இலவ மரமும், விளா மரமும் அங் கொன்றும் இங்கொன்றுமாய்ப் பரவலாக வளர்ந்திருக்கும், கிழ லின்றித் தெளிந்த் நடு இடத்தின் பக்கத்திலே. . ஈந்து ஈச்சமாம். முளி உலர்ந்த தாள். அடிமரம். வெள் ளில் விளா மரம். தெள் இடை என்றது மரங்கள் நெருங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/36&oldid=548456" இலிருந்து மீள்விக்கப்பட்டது