பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிலியின் வேதனே 29.

விரி யென்றது பரட்டையைக் குறித்தது. வெண்மை வெறுமை; உண்ணுது வறிதே இருக்கும் தன்மை. மறத்தியர் வேடர் குல மகளிர். விருந்து - விருந்தினள்.)

★ மறுபடியும் அந்தப் பெண்ணின் உருவமும் இயல்பு களும் கினேவுக்கு வருகின்றன. அழகு நிரம்பிய அந்தப் பெண் அழகற்ற அழுக்கு நிறைந்த குடிசையில் தங்கு வதா? " கடவுளே! ஆரூர்ப் பெருமானே! இது என்ன கூத்து' என்று செவிலித்தாய் எண்ணினள். அவள் திரு. வாரூர்த் தியாகராசப் பெருமானிடத்தில் மிக்க அன்பு பூண்டவள். எதை கினேத்தாலும் அந்த கினேவு ஆரூர்ப் பெருமானேடு வந்து எப்படியாவது ஒட்டிக் கொள்ளும்: இப்போதும் அப்படியே ஆயிற்று. -

தன் பெண்ணின் அழ்கை எண்ணிப் பார்த்தாள். பாலை நிலத்தில் கடக்கும் அடியா அது? சின்ன அடி அல்லவா ? கமலம் போன்ற அடி அல்லவா ? வயலிலே தளதளவென்று வளர்ந்த கமலம் எவ்வளவு அழகாக, மென்மையாக, தண்மையாக இருக்கும் அப்படி இருக்கும் அடியை யுடையவள் என் மகள்!' . . . . - கமலத்தை எண்ணியபோது அவளுக்கு மற்ற ஊர் வயல் நினைவுக்கு வரவில்லை. திருவாரூருக்குப் போய்ச் சுவாமி தரிசனம் செய்துகொண்டபோது அந்த ஊரின் அழகையெல்லாம் பார்த்து மகிழ்ந்திருக்கிருள். அங்குள்ள வயல்களேயும் அவற்றில் மலர்ந்த கமலங்களையும் கண்டிருக் கிருள். இப்போது அந்தக் கமலம் கினேவுக்கு வந்தது. திருவாரூருக்குக் கமலாலயம் என்பது ஒரு பெயர். கமலத் தில் வாழும் திருமகள் தங்கித்தவம் செய்த தலம் அது. ஆதலின் அந்த ஊர்க்கமலம் சிறப்புடையது அல்லவா?

திருவாரூரில் அவளுக்கு அன்பு உண்டாவதற்குக் கார ணம் அதனுடைய நிலவளம் அன்று. அங்கே இறைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/39&oldid=548460" இலிருந்து மீள்விக்கப்பட்டது