பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஒன்றே ஒன்று

எழுந்தருளியிருப்ப்தல்ைதான் அவளுக்கு அன்பு உண்டா யிற்று. அப்பெருமானுடைய நினைவு இப்போது எழுவது இயல்புதானே? தன் மகளே ஆண்டவன் காப்பாற்றவேண் டும் என்ற கினேப்பு எழ, அதனோடு தொடர்ந்து அவனது ஆரூரும் அதில் உள்ள கமலமும் கினேவுக்குவர், தன் பெண் னின் அடியை நினைத்த நினேப்போடு அது இணைந்து கொண்டது.

ஆரூர்ப் பெருமான் அருள் இருந்தால் எல்லாத் துன் பங்களையும் போக்கிக் கொள்ளலாம். துன்பத்தில் எல்லாம் பெரிய துன்பம் மரணத் துன்பம். மரணத்தை உண்டாக்கு பவன் கூற்றுவன். அவனுடைய ஆற்றலைச் செற்றவன் ஆரூர் அண்ணல். அவன் வாழும் ஆரூரில் வயலில் மலரும் கமலத்தைப் போன்ற சிறிய அடியை உடையவள் அவ ளுடைய பெண்.

'பாலை நிலத்தை கினேக்கையில் அந்தப் பெண்ணின் சிறிய அழகிய அடியும் கினேவுக்கு வந்து துன்புறுத்தியது. வெள்வாய் மறத்தியரை எண்ணியபோது தன் மகளின் செவ்வாய் கினேவுக்கு வந்தது. ‘என் பெண் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயுடையவள் ஆயிற்றே!" என்று எண்ணிள்ை. வாய் கினேவுக்கு வந்தவுடன் அவளுடைய சொல்லினிமையும் தொடர்ந்து வந்தது. 'குயில் கூவுவதைப் போலப் பேசுவாளே! என்று நினைத்து ஏங்கிள்ை.

அவள் உருவம் முழுவதும் மென்மையானது. ஆளுர்ச் செய்யில் வளரும் கமலம் போன்ற சிறிய அடியும் கொவ் வைச் செவ்வாயும் குயில் மொழியும் உடைய பூங்கொடி அவள்.

கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன் ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச் செய்வளர்கமலச் சீறடிக் - கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/40&oldid=548461" இலிருந்து மீள்விக்கப்பட்டது