பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிலியின் வேதனே - 31.

(கிருத்தமில்லாத கடற்று எனப் பெயர் பெற்ற கொடிய தொழிலேயுடைய ஒருவனது ஆற்றலே அழித்த இறைவனுக்குரிய திருவாரூரில் உள்ள வயல்களில் வளரும் தாமரையைப் போன்ற சிறிய அடியையும், கோவைக்கனியைப் போன்ற சிவந்த வாயை யும், குயிலின் குரலைப் போன்ற மொழியையும் உடைய பூங்கொடி யைப் போன்றவள். - -

திருந்தாகிருந்தாத கொடுமையை உடைய கூற்று - யமன். பெயரிய - பெயர்பெற்ற. கொடுந்தொழில என்றது உயிரைப் பிரிக்கும் செயலே. செற்ற-அழித்த, அண்ணல் பெருமையை புடையவன்; இறைவன். செய்வயல். சீறடி - சிறு அடி, கொடி கொடியைப் போன்ற மென்மையை உடையவள்.) . . .

“இவ்வளவு அழகும் மென்மையும் உடையவள் அன் புடைய உறவினர்களையும் செல்வம் கிரம்பிய வீட்டையும் விட்டு, அயலான் ஒருவனேடு கிழலற்ற பாலைவனத்தில் மரச்செறிவில்லாத வெளியில் உள்ள அழகற்ற வேடர் குடிசையில் மறத்தியருக்கு விருந்தினள் ஆளுளோ? என்று செவிலி எண்ணி வேதனைப்படுகிருள். . .

புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை மனமலி செல்வம் மகிழாள் ஆகி ஏதலன் ஒருவன் காதலன் ஆக, விடுசுடர் நடுவுநின்று அடுதலின் நிழலும் 5. அடியகத்து ஒளிக்கும் ஆரமுற் கானத்து, வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ மெய்விதிர் எறியும் செவ்வித்து ஆகி முள் இலே ஈந்தும் முளிதாள் இலவமும் வெள்ளிலும் பரந்த தெள்ளிடை மருங்கில், 10. கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப்

பாசம் தின்ற தேய்கான் உம்பர் - மரைஅதள் மேய்ந்த மயிர்ப்புன் குரம்பை விரி நரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர் விருந்துஆ யினள்கொல் தானே, திருந்தாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/41&oldid=548462" இலிருந்து மீள்விக்கப்பட்டது