பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - ஒன்றே ஒன்று

அவர்களுடைய தீச் செயல்களினல் வரும் துன்பங் களைச் சகித்துத் கொண்டிருந்த கிலேயில் முதலில் இருந் தான். அத் துன்பங்கள் மிகுதியாக உறைக்கவே அவற்றி னின்றும் விடுதலை பெறவேண்டும் என்ற உணர்வு உண்டா யிற்று. இது இரண்டாவது கிலே. இந்த கிலேயில், பல காலம் உடன் இருப்பவர்களாயிற்றே என்ற நினைவு தடை யாக இருந்தது. ஆயினும் துன்பத்தினின்றும் நீங்கவேண் டும் என்ற கினேவு முறுக முறுக, அதற்கு வழி என்ன என்ற் ஆராய்ச்சி தலைப்பட்டது. 'இந்த ஊரிலே நாம் வாழாமல் இவர்களே விட்டு விட்டு வேறு ஊருக்குப் போய் விடுவோம்" என்ற யோசனை உண்டாயிற்று. இது மூன்ரு வது நிலை. எங்கே போவது? பழக்கம் இல்லாத இடத்தில் மீட்டும் யாரேனும் வந்துவிட்டால் என்ன செய்வது?" என்ற ஐயங்கள் இப்போது எழுந்து கலக்கத்தை உண்டாக் கின். அவற்றை ஒருவாறு புறக்கணித்துத் தெளிவு பெற் முன். எங்கே சென்ருல் இத்தகைய கூட்டத்தினரின் தொடர்பு இல்லாமல் இருக்கலாம்? என்ற எண்ணம் வர வர வலிவடைந்தது. பலரைக் கேட்டான். கடைசியில் ஒர் ஊரைத் தெரிந்து கொண்டான். அங்கே சென்றுவிட்டால் பொல்லாதவர்களின் தொடர்பே இராதென்றும். இன்பம் உண்டாகும் என்றும் கேள்வியுற்ருன். மீட்டும் மீட்டும் அந்த ஊரைப் பற்றி விசாரித்துப் பல செய்திகளைத் தெரிந்துகொண்ட்ான். எந்த எந்த ஊரிலிருந்தோ கல்லவர் கள் பலர் வந்து தங்கும் ஊர் அது என்பதை அவன் அறிக் தான். பிறருடைய துன்பமாகிய வெப்பத்தைப் போக்கும் மேகத்தைப் போன்ற அன்பர்கள் அந்த ஊரில் வந்து திரண்டு வாழ்கிருர்கள் என்று தெரிய வந்தது.

ஊர் உயர்ந்தது. நல்ல காற்றும் நீரும் உடையது. அங்கே செல்வது என்று உறுதி பூண்டு விட்டான். தான் இபாய்ப் புகவேண்டிய ஊர் இன்னதென்று கிச்சயம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/44&oldid=548465" இலிருந்து மீள்விக்கப்பட்டது