பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளிர்ந்த இடம் 39,

வைக் கண்டுபிடித்த பிறகுதான் ஒலியலைகள் படர்கின்றன. என்று சொல்ல இயலாது.

இப்படியே, ஒருவன் எண்ணும் எண்ண அலைகளும் பரவுகின்றன. அந்த எண்ணம் வலிமையுடையதாக இருங் தால் அது மற்றவர்களைப் பாதிக்கின்றது. பலர் கூடி நல்ல. எண்ணங்களே எண்ணினல் அவ்விடத்தில் குளிர்ந்த, எண்ண அலைகள் எழுகின்றன. அவ்ை திரண்டு கிற்கின்ற அந்தச் சூழ்கிலேயில் யார் வந்தாலும் அமைதி உண்டா கிறது. அந்தத் தண்ம்ை மேல் எழுந்து மேகத்தைச் சார்ந்து மழையைப் பொழிவிக்கிறது. - -

கல்லவர்கள் உள்ள இடத்தில் மழை பொழியும் என்ற கம்பிக்கை வெறும் குருட்டு நம்பிக்கை அன்று. நல்லவர் கள் உள்ளத்தில் அன்பு பொங்கி வழியும். அதன் அலே கள் தண்மையாகப் படரும். அவர்களேச் சார்பவர்களும் அவர்களைப் போலவே அன்பர்களாக இருப்பார்கள். அவர் களுடைய எண்ணங்களும் அகல பாய்ந்து தண்மையை உண்டாக்கும். இந்தத் தண்மை மிகுதி ஆக ஆகச் சுற்றி லும் தண்மை விரவும், மழை உண்டாகும்.

எண்ணத்தில்ை தண்மையும் வெம்மையும் உண்டா, வதை நாம் நம் அநுபவத்தில் உணரலாம். நமக்குச் சினம் உண்டானல் நரம்புகளில் படபடப்பும் அதல்ை உடம்பில் வெப்பமும் உண்டாகின்றன. சினங் கொண்டவனேக் கொதித்தெழுந்தான் என்று சொல்வதில், அவன் உடம் பில் வெப்பம் உண்டாகும் என்ற குறிப்பும் இருக்கிறது. சாந்தமாக இருக்கும்போது முகத்தில் ஒளி படர்கிறது. உள்ளம் கனமின்றி லேசாக இருக்கிறது. உடம்பு குளிர் கிறது. இது லாம். அதுபவத்தில் அறிந்தது.

அன்பு என்பது எல்லாவற்றினும் சிறந்த பண்பு, இறைவனிடம் வைக்கும் அன்பு அன்பு வகைகளிற் சிறக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/49&oldid=548470" இலிருந்து மீள்விக்கப்பட்டது