பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யமனது எச்சரிக்கை

உலகில் பிறந்தவர்கள் யாவரும் இறந்துபோவார்கள். உடம்பைக் காய கற்பத்தால் நீண்ட காலம் உறுதியாக இருக்கும்படி செய்து வாழ்கிறவர்களும் ஏதேனும் ஒரு நாள் இறந்தே போவார்கள். இந்த உலகமே ஒரு காலத்தில் உருக்குலேந்து அழியும் என்ருல், ஐம்பூதங்களின் சேர்க்கை ய்ால் உண்டான உடம்பு எப்போதுமே அழியாமல் இருக் கும் என்று சொல்லலாமா?

உயிரும் உடம்பும் கூடித் தோன்றுவதைப் பிறப்பு என்றும், உடம்பினின்றும் உயிர் பிரிவதை இறப்பு என் றும் சொல்கிருேம். உடம்பையும் உயிரையும் ஒன்று சேர்க் கும் வேலையைச் செய்கிறவன் பிரமன். ஒரு தனித்தலேவணுகிய இறைவன் ஆணேயினல் எல்லாம் நிகழுமானலும், அந்த ஆணையின் கருவிகளாக நின்று தொழில்புரிபவர் பலர். அவர் களே தேவர்கள். அரசாங்கத் தலைவர் ஒருவர் இருந்தாலும் அவர் ஆணைப்படி பல மந்திரிகளும் ஒவ்வொரு மந்திரியின் கீழும் பல அதிகாரிகளும் இருக்கிருர்கள். அரசாங்க அலு வல்களைப் பல பகுதிகளாகப் பிரித்து, இன்ன இன்ன பகுதி களே இன்ன இன்ன அமைச்சர் பொறுப்பு ஏற்று கடத்த வேண்டும் என்று வரையறை செய்து கொண்டு, ஆட் சியை கடத்துகிருர்கள். உலகத்து அரசாட்சிக்கு மூல காரணமாக இருப்பது இறைவனுடைய அருளானே. அந்த ஆ ட் கிமு றை பல பகுதிகளாகப் பிரியும். ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தேவருடைய பொறுப்பில் இருக்கும். படைப்பு என்னும் பகுதிக்குத் தலைவன் பிரமன். உயிரை உடம்பினின்றும் பிரிக்கும் வேலை யமனுக்கு உரியது. உடம்பினின்றும் உயிரைக் கூறுபடுத்துவதனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/51&oldid=548472" இலிருந்து மீள்விக்கப்பட்டது