பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J;2 ஒன்றே ஒன்று

கூற்றுவன் என்றும், உயிரைப் பிரிக்கும் காலம் அறிந்து பிரிப்பதனல் காலன் என்றும், இந்தக் கடமையை வழுவாது செய்வதால் தர்மராஜன் என்றும் அவனுக்குப் பெயர்வழங்கும். அவனுக்கு ஏவலர் பலர் உண்டு. கணக்குப் பிள்ளே கூட இருக்கிருன்; சித்திரபுத்திரன் என்பது அவன் பெயர். படைக்கும் தொழிலப்போல உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் தொழிலும் மிகவும் கடுமையானது: பொறுப்பு வாய்ந்தது. - - .

மரணம் என்ருல் எல்லோருக்கும் அச்சம் உண்டாகும். 'சாதலின் இன்னதது இல்லை’ என்று வள்ளுவர் சொல் கிருர், மரணத்துன்பம் கொடியதிலும் கொடியது. அதை கிகழ்த்துகிறவனும் அச்சக்தரும் தோற்றமுள்ளவனாக இருக்கிருன். மரணம் அச்சந்தருவதானல் மரணதேவனும் பயங்கர சொரூபியாகத்தானே இருக்கவேண்டும்? அந்த யமன் தன்னைக் காட்டிலும் பயங்கர உருவத்தை உடைய தூதர்கள் பலரை வைத்து வேலை வாங்கித் தன் உத்தியோ கத்தை நடத்தி வருகிருன். -

உலகில் பிறக்கிறவர்கள் யாவரும் இறக்கிருர்கள்; அவர்களுடைய உடம்பினின்றும் உயிர்கள் பிரிகின்றன. அத்தனே பேருக்கும் மரணம் சம்பவிக்கிறது. ஆனல் யமனுடைய தூதுவர்களுக்கு வேலே வைக்காத மரணங்கள் சில் நிகழ்வது உண்டு. அதைப்பற்றிச் சற்று இங்கே கவனிக்கலாம், . . -

- At

ஓர் ஊரில் சிறைச்சாலை ஒன்று இருக்கிறது. அந்தச் சிறைச்சாலையில் பலவகையான குற்றவாளிகள் அடைபட் டிருக்கிருர்கள். அவர்களில் கல்லவர்களும் சிலர் இருக் கிருர்கள். சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற தொண்டர்களைப் போன்றவர்கள் அவர்கள். அவர்களே மற்றக் குற்றவாளிகளோடு சேர்த்து எண்ண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/52&oldid=548473" இலிருந்து மீள்விக்கப்பட்டது