பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-կէ: ஒனறே ஒன்று

பிலே புகாத விடுதலை கிடைக்கும். அத்தகையவர்களே இறைவளுேடுள்ள சிவகணத்தினர் வந்து நேரே இன்ப கிலேயமாகிய வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். செய்ய வேண்டியவற்றைச் செய்யாது, கழிக்கவேண்டிய சிறைவாச காலத்தில் பின்னும் புதிய குற்றங்களேச் செய்தவர்களுக் குப் போலீஸ் காவலோடு சிறை மாற்றம் ஏற்படுவது போல, பலருக்கு மரணம் உண்டானல் அடுத்தபடி வேறு பிறப்பு ஏற்படுகிறது; வேறு உடம்பிற் புகுந்து மீட்டும் உலக வாழ்க்கையை மேற்கொள்கிருர்கள். -

இறைவனுடைய அருள்பெற்ற பக்தர்கள், ஞானிகள் மரணம் அடைந்தாலும் அதை மரணம் என்று சொல்வது வழக்கமன்று இறைவன் திருவடி அடைந்தார்கள், பரிபூர .ணம் எய்தினர்கள் என்றே சொல்வார்கள். அவர்களுக்கு இப்போது சம்பவிக்கும் மரணம் சிறைமாற்றம் அன்று: விடுதலே; கேரே வீட்டையடையச் செய்யும் கிகழ்ச்சி. ஆதலால் அதை மரணம் என்று கூறுவதைவிட விடுதலே என்று சொல்வதுதான் பொருத்தம்; விதேகமுக்தி அடைக் தார்கள் என்று சொல்வதும் அதல்ைதான். மற்றவர்களோ, தாங்கள் செய்த வினேக்கு ஏற்ப வேருெரு சிறையாகிய

உடம்புக்குள் புகுகிருர்கள்.

சிறையிலிருந்து இன்று யார் யார் வெளி வருகிருர்கள் என்ற கணக்கைப் போலீஸ்காரர்கள் தெரிந்துகொள்கிருர் கள். சிறை மாற்றம் யாருக்கு விதித்திருக்கிறதோ அவர்களே மாத்திரம் தம்முடைய காவலுக்குள் வைத்துக் கூட்டிச் செல்கிருர்கள். விடுதலை அடைகிறவர் பக்கத்தில் போவ தில்லை. அவர்களே அழைத்துச் செல்லத்தான் நண்பர்கள் வந்திருக்கிருர்களே! - .--

போலீஸ் தலைவர் தம் கீழ் வேலை பார்க்கும் போலீஸ் சேவகர்களைப் பார்த்து, "நீங்கள் எல்லோரையும் ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/54&oldid=548475" இலிருந்து மீள்விக்கப்பட்டது