பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யமனது எச்சரிக்கை A5

தரமாக எண்ணி உங்கள் உருட்டல் மிரட்டல்களேக் காட் டாதீர்கள். தேச சேவைக்காகச் சிறைக்குப் போய் விடுதலே பெறும் கல்லவர்கள் இருக்கிருர்கள். அவர்கள் வெளி வந்தால் கும்பிடு போட்டு வழிவிட்டுத் தூரத்தில் கில்லுங் கள்” என்று சொல்லும சந்தர்ப்பம் கூட உண்டு. போலீஸ் தலைவர் சொல்லுகிருரோ இல்லையோ, யமன் தன் துரதர் களிடம் இதுபோன்ற எச்சரிக்கையைச் செய்வதாக நக்கீரர் பாடுகிரு.ர். -

அவர்களைப் பற்றிச் சொல்ல வாயெடுக்கும்போது யமன் கைகள் தாமே குவிகின்றன. நேரே அவர்களே அவன் பார்க்கவில்லை. ஆயினும் அவர்களுடைய பெருமை அப்படிச் செய்கிறது. அந்த நமனே தொழும் தன்மையுடையவர்கள் இறைவனுடைய பக்தர்கள்.

"என்ன இவர் இப்படிக் கும்பிடு போடுகிருரே! யாரைப் பார்த்து?’ என்று திகைக்கிருர்கள் கால துரதுவர்கள். -

யமன் பேசத்தொடங்குகிருன்:'துரதர்களே! உடம்பை விட்டுச் செல்கின்ற உயிர்கள் எல்லாவற்றையுமே நம் முடைய காவலுக்கு உட்படுத்த வேண்டும் என்று எண்ணு தீர்கள். தெரியாமல் ஒரு பக்தனேப் பிடிக்கப் போய் உதைபட்டவன் நான். அந்த நினேவினல் சொல்கிறேன். குற்றமில்லாத புகழையுடைய காளத்திப் பெருமானிடத் தில் அன்புடைய பக்தர்கள் இருக்கிருர்களே, அவர்களிடம் விழிப்பாயிருங்கள். அவர்களைக் கண்டால் பணிந்து வில கிப் போங்கள். அவர்கள் விடுதலை யடையும் நேரம் நமக் குத் தெரிந்தாலும் நமக்கு அவர்களிடம் வேலையில்லை. எத்தனே தூரம் அவர்களே விட்டு விலகி நிற்க முடியுமோ அத்தனே தூரம் அகல கில்லுங்கள். அவர்கள் கண்ணில் நீங்கள் படக்கூடாது. இதை உங்கள் கினேவில் வைத்துக் கொள்ளுங்கள்.” * -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/55&oldid=548476" இலிருந்து மீள்விக்கப்பட்டது