பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்தியின் அன்பு

தாய் அன்பு என்பது எல்லாவற்றிலும் தூயது: உயர்ந்தது: பயனே எதிர்பாராமல் நிகழ்வது. -

தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவில் மனித குலத் தைக் காட்டிலும் விலங்குகள். சிறந்து கிற்கின்றன. அறிவு படைத்திருப்பதனால் அதன் கிழலாகத் தன்னலமும் விருப்பு. வெறுப்பும் மனிதனுடைய உள்ளத்தில் எழுகின்றன. தான் பெற்ற குழந்தையை வீசி எறியும் தாய்மார்கள் இருக்கிருர், கள். அவர்களுடைய அறிவு, குழந்தையைப் பழி யுருவ மாகப் பார்க்கிறது! விலங்கினத்தில் இந்தக் கேடு இல்லை. அவற்றிற்கு அறிவு இல்ல அல்லவா? -

இதல்ைதான் பேரன்பர்கள் இறைவனிடம் தாய்க்கும் குழந்தைக்குமிடையே உள்ள அன்பு இருக்க வேண்டு மென்று வற்புறுத்தும்போது மானிடத் தாயைக் காட் டிலும் வேறு தாயையே சொல்கிருர்கள்.

"கற்ருவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே." என்பர் மாணிக்கவாசகர். . .

நாகரிகமும் அறிவும் ஏற ஏற அன்பு எங்கோ மறைந்து புதைந்து போகிறது. நாகரிகம் அற்ற மலை வாழ் சாதியின ரில் அன்பும் ஒழுக்கமும் சிறந்து கிற்கின்றன. தாய்மை யென்னும் பண்பை மக்களிடம் பார்ப்பதைவிட மிகுதியாக விலங்கினங்களிடம் பார்க்கலாம்.

சங்க காலத்து நூல்களில் விலங்கினங்களிடம் உள்ள தாய்மையைப் புலவர்கள் பல வகையில் பாராட்டி யிருக் கிருர்கள். திருஞான சம்பந்தர் தேவாரம் முதலியவற்றி லும் தாய்மைக் காட்சிகள் வரும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/57&oldid=548478" இலிருந்து மீள்விக்கப்பட்டது