பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

孕8 ஒன்றே ஒன்று

நக்கீரர் பாடிய திருவிங்கோய்மலை எழுபது என்ற நூலில் ஒரு காட்சி வருகிறது. அதை இப்போது பார்க்கலாம்.

k * திருவிங்கோய்மலை என்பது சோழ நாட்டில் தேவாரம் பெற்ற தலங்களில் ஒன்று காவிரிக்கு வட கரையில் இருக்கிறது. திருவெங்கிநாதர் மலை என்று இப் போது அதன் பெயர் திரிந்து வழங்குகிறது. முசிரிக்கு அருகில் இருக்கிறது. காவிரியின் தென்கரையில் இருக்கும் கடம்பர் கோயில், வர்ட்போக்கி என்ற இரத்தின கிரி, திரு ஈங்கோய்மலை என்ற மூன்றும் தொடர்புடைய தலங்கள். ஒரே நாளில் மூன்று வேளைகளில் இந்த மூன்று தலங்களை யும் தரிசித்தால் நலம் உண்டு என்று பக்தர்கள் கூறுவார் கள். "காலைக் கடம்பர், மத்தியான்னச் சொக்கர், அந்தித் திருவெங்கிகாதர்” என்று இந்த முறையைப் பற்றி ஒரு பழமொழி அந்தப் பக்கங்களில் வழங்குகிறது. .

சங்கோய் என்ருல் வண்டுகள் வைத்த தேனடை என்று பொருள். ஈவண்டு. கோய்-பை அல்லது அடை. இந்த மலையில் பண்டைக் காலத்தில் எங்கும் கிறைந்த தேனடைகள் இருந்தமையால் இந்தப் பெயரை வைத்தார் கள் போலும்.

நக்கீரர் சங்கோய் மலைக்கு வந்தார். எங்கே பார்த் தாலும் தேன் அடைகள். பல இடங்களில் அடைகளில் தேன் கசிந்து ஒழுகிக்கொண்டிருந்தது. குரங்குகள் கிளேக்குக் கிளே தாவிக்கொண்டிருந்தன. அவற்றைக் கண்ணுரக் கண்டு மகிழ்ந்தார். இயற்கையெழிலைக் கண் டால் அதிலே ஈடுபட்டு எல்லாவற்றையும் மறந்து நிற்பது ‘புலவர்கள் இயல்பு அல்லவா? .

ஒரு குரங்கு மாத்திரம் ஒரு மரத்தின் கிளையிலே படுத் திருந்தது. அது தாவக் கர்ணவில்லை. அதன் அருகில் மிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/58&oldid=548479" இலிருந்து மீள்விக்கப்பட்டது