பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்தியின் அன்பு 49

இளைய குட்டி ஒன்று இருந்தது. அப்போதுதான் பெற்ற குட்டி போலத் தோன்றியது. குட்டியை ஈன்றெடுத்த தாய்க் குரங்கு அந்த இளைப்பினலே எங்கும் போகாமல் அங்கேயே கிடந்தது. குட்டி கீச்சுக் கீச்சென்று கத்தியது. மந்தி பால் கொடுத்தது. அப்போதும் குட்டி கத்துவது கிற்க வில்லை. மந்தி சுற்றும் முற்றும் பார்த்தது: மேலே பார்த் தது. மலேப் பக்கத்தில் வளர்ந்த மரம் அது. மலேப்பாறை யின் இடுக்குகளில் மிக உயரத்தில் அடையடையாகத் தேன் இருந்தது. அங்கிருந்து அது ஒழுகிக்கொண்டிருந்தது. அது மரத்தின் கீழே ஓரிடத்தில் தேங்கியிருந்தது. மந்தி உடனே கீழே இறங்கியது. குட்டி அதைக் கட்டிக் கொண்டே இருப்பதுதானே? மெல்லத் தேன் தங்கிய இடத்துக்கு வந்து தன் கையைத் தேனில் தோய்த்து அந்தத் தேனேக் குட்டிக்கு ஊட்டத் தொடங்கியது. அது அந்தத் தேனேச் சுவைக்கவில்லை: தன் குழந்தைக்கு ஊட்டி யது. என்ன தாயன்பு குட்டி அப்புறம் ஏன் கத்துகிறது? அது பசித்திருந்தது. மந்தி தந்த பால் போதவில்லை. இப் போது இனித்த தேன் கிடைத்தது. தாய் தேனே ஊட்ட உண்டு மகிழ்ந்தது.

"இந்த மந்திக்குத் தன் குட்டியினிடம் எத்தனை அன்பு 1 இந்தக் காட்சியைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைத்ததே' என்று எண்ணி நக்கீரர் மகிழ்ந்தார்.

"அன்புக்குள் தாய் அன்பு மிகச் சிறந்தது: இனியது: துன்பத்தை நீக்குவது. அதனுல்தானே இறைவனுடைய அன்புக்கு அதைப் பெரியவர்கள் உவமை கூறுகிருர்கள்?"

இப்படி கினைத்தவுடனே இறைவனுடைய திருவரு

வின் பெருமையை அவர் எண்ணலானர். இறைவனிடம்

அன்பு கொள்வதில் இரண்டு வகை உண்டு. பூனேக்குட்டி

யைப் பூனே கெளவிக்கொண்டு போகும். குரங்குக் குட்டி

4. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/59&oldid=548480" இலிருந்து மீள்விக்கப்பட்டது