பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

10. தன்போல் என்பால் அன்பன், தன்பால்

காண்பது கருதிப் போத்தனன் : மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

(சந்திரன் ரம்பித் தங்கும் மதிலையுடைய, கான் மாடக் கூடலென்னும் கரத்தில் உள்ளதும், பால் போன்ற வெள்ளே நிறமும் கோடுகளும் உள்ள சிறகையுடைய அன்னங்கள் பழகுகின்ற சோலகளையுடையதுமாகிய ஆல வாய்த் திருக்கோயிலில் வாழும் சிவ ஆகிய யான் உரைக்கும் வார்த்தையாகிய இதனே, கார்காலத்து மேகத்துக்கு ஒப்பு என்னும்படியாகப் பாவாணர்களுக்குத் தனக்கே உரிய இயல்பினுலே பலகாலும் பொருளே உதவி. ஒளி திகழும் கிறம் பெற்ற பெரிய சந்திரனே ஒத்துவிளங்கும் குடையின் கீழ் இருந்து, போர்ம் செலுத்தும் குதிரையை ஊர்ந்து ஒட்டும் சேரன் காண்க: முறைப்படி பாறைப் பயில்கின்ற பாண பத்திரன் என்னும் இவன் உன்னேப் போல என்னிடம் அன்புடையவன்; உன்னிடம் உன்னைக் கானுவதை எண்ணி வந்தான்; மாட்சிமைப்பட்ட பொருளைக் கொடுத்து இவனே அனுப்ப வேண்டும்.

மதி - சந்திரன். புரிசை - மதில். மாடக்கூடல் . நான்மாடக்கூடல்: இது மதுரையின் பெயர். ஆலவாய் : கோயிவின் பெயர். பருவம் - பொழி பும் பருவம். கொண்மு - மேகம். படி - ஒப்பு. குரு கிறம், செரு போர். உகைக்கும் . ஒட்டும். பண்பு - யாழ் வாசித்தற்குரிய அமைதி. தன் என்றது படர்க்கையில் வைத்துச் சொன்னது. விடுப்பது - விடுக்க, !

காரைக் காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேர மான் பெருமாள் என்னும் மூவரும் அறுபத்து மூன்று நாயன் மார்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய வரலாறுகள் பெரிய புராணத்தில் இருக்கின்றன. நக்கீரர், கல்லாடனுர், கபிலர், பரணர் என்னும் நால்வரும் கடைச்சங்க காலத்துப் புலவர்கள். இப் பெயருள்ளவர்கள் இயற்றிய பாடல்கள் சங்க நூல்களிற் காணப்படுகின்றன. ஆயினும் இத் திருமுறையில் அவர்கள் இயற் றியனவாக உள்ள நூல்களில் கிருமுருகாற்றுப் படையைத் தவிர மற்றவை சங்கத் தொகை நூல்களில் சேர்க்கப் பெறவில்லை. அவற்றின் நடை, உள்ளுறையாகியவற்ருல் அவை அந்தப் பழம் புலவர்களின் வாக்கென்று சொல்வதற்கு இல்ல்ை,

கம்பியாண்டார் நம்பிகள் கிருத்தொண்டர் கிருவந்தாதியில் சங்கத்துப் புலவர்களைப் பொய்யடிமையில்லாத புலவர் என்னும் தொகையடியார்களாக வைத்துப் பாடுகிரு.ர். `. தரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச்

சங்க மதிற்கபிலர் . பரணர்தக் கீரர் முதல் நாற்பத்,

தொன்பது பல்புலவோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/6&oldid=548422" இலிருந்து மீள்விக்கப்பட்டது