பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஒன்றே ஒன்று

தன தாயைத் தான்ே பற்றிக்கொள்ளும் குழந்தையின் முயற்சியின்றித் தாய் முயன்று ப்ற்றிக்கொள்ளும் அன் பைப் பூனேயினிடம் பார்க்கிருேம். இறைவனும் தன் அடியர்களுக்குக் கவலை ஒன்றும் இல்லாமல் தானே வலிய வந்து பாதுகாக்கிருன்; இது மார்ஜால நியாயம் என்று. ச்ொல்லப்பெறும்.

குட்டி பற்றிக் கொள்ளக் குரங்கு கடமாடுகிறது. அது பற்றை விட்டால் அதற்கு ஆபத்து உண்டாகும். அப்படி இறைவனே இடைவிடாமல் பற்றிக் கொண்டால் அவன் அருள் கிடைக்கிறது. இதை மர்க்கட கியாயம் என் பார்கள். பூனைக் குட்டிக்குச்செயல் இல்லை; குரங்குக் குட் டிக்குச் செயல் உள்ள வரையில் பயம் இல்லை.

மந்தியையும் அதன் குட்டியையும் கண்ட நக்கீரருக்கு இறைவனுடைய அருள் நினைவு உண்டாயிற்று. 'அன்பர் கள் இறைவனே இறுகப் பற்றிக்கொண்டால் அவன் அவர் களுக்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கி, இன்பத்தை உண்டாக்குகிருன். இந்த மந்தி தன்னைப் பற்றிக்கொண்ட குட்டிக்கு முதலில் பசியைப் பாலால் போக்கிப் பின்பு இனிமையான தேனே ஊட்டியது. இது இறைவன் இயல் பைப்போலத் தோன்றுகிறது. அவன் எழுந்தருளியிருக்கும் இந்த ஈங்கோய் மலையில் இத்தகைய காட்சிகள் அவன் அருளே கினைப்பூட்டும் வகையில் நிகழ்தல் எவ்வளவு பொருத்தம்!" - -

தம் கருத்தையெல்லாம் சுருக்கியமைத்து அவர் ஒரு பாடலேப் பாடிவிட்டார்.

ஈன்ற குழவிக்கு மந்தி இறுவரைமேல் தான்ற நறவத்தைத் தான்நனுகித்-தோன்ற விரலால்தேன் தோய்த்து ஊட்டும் ஈங்கோயே நம்மேல்

வரலாம்நோய் திர்ப்பான் மல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/60&oldid=548481" இலிருந்து மீள்விக்கப்பட்டது