பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்தியின் அன்பு 51

(தான் பெற்ற குட்டிக்குத் தாயாகிய மந்தி மலைப் பக்கத்தின் மேலிருந்து ஒழுகிய தேனே அதனருகிலே சென்று பிறர் காணும் படியாகத் தன் கை விரல்ால், அத் தேனைத் தோய்த்து ஊட்டுகின்ற ஈங்கோயானது, தன்னே நம்பிய அடியார்கள்ாகிய நம் மேல் படை எடுத்து வரலாகும் துன்பங்களைத் தீர்த்தருளும் இறைவன் எழுங் தருளியிருக்கும் மலே ஆகும்.

மந்தி - பெண் குரங்கு இறு வரை மலேயின் பக்கம், 'இருள் தூங்கு இறுவரை - இருள் செறிந்த பக்கமலே: (கலித் தொகை 49 :18, நச்சிர்ைக்கினியர் உரை), பெரிய மலை என் றும் பொருள் கொள்ளலாம் (சீவகசிந்தாமணி, 1463) நான்ற ஒழுகிய, இடைவெளியின்றிக் கம்பி தொங்குவது டே ரவி ஒழுகுவ தால் தொங்கிய என்ற பொருளையுடைய நான்ற என்ற சொல்லே அமைத்தார்; காம்பு கால்பொரக் கண்ணகன் மால்வரைப், பாம்பு கான்றெனப் பாய்பசுங் தேறலே' (கம்பராமாயணம், நாட் டுப் படலம், 35.) நறவம் - தேன். கணுகி அணுகி, வால் ஆம் நோய்-வாலாகிய துன்பங்களே. ஈங்கோய், தீர்ப்பான் மலை என்க.)

இது ஈங்கோய் மல் எழுபதில் உள்ள 9-ஆவது பாட்டு. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/61&oldid=548482" இலிருந்து மீள்விக்கப்பட்டது