பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஒன்றே ஒன்று

"ஆகையில்ை உரைவந்து உறும் பதத்தே உரைமின் கள்" என்று கபிலர் உபதேசம் செய்கிருர், உரைமின்கள் என்று சொல்லிவிட்டு, ஏன் உரைக்கவேண்டும் என்று காரணம் சொன்னர். எதை உரைக்கவேண்டுமென்பதைப் பின்னே சொல்கிரு.ர்.

இறைவன் திருநாமத்தை உரைக்கவேண்டும் என்று சொல்கிரு.ர். இறைவனே அடையாளம் சொல்லி, அவன் காமத்தைச் சொல்லுங்கள் என்று பாடுகிருர். அவர் கூறும் அடையாளம் அழகாக இருக்கிறது.

அவர் இறைவன் திருநாமங்களேச் சொல்லி அடை யாளம் காட்டவில்லை. அவனுடைய உருவத்தைக் காட்ட வும் இல்லை. அவன் இருக்குமிடத்தைச் சொல்லி, அங் குள்ள பெருமானப்பற்றிப் பேசுங்கள் என்று சொல்கிருர், அந்த இடம் பெரிய சிவஸ்தலமாகிய மறைக்காடு; வேதா ரண்யம். அங்கே மாணிக்கம் போல் அரிய பொருளாய், அறியாமையிருளோட்டும் ஞான ஒளி வீசுபவய்ை, விலே மதிக்கலாகாததாய், மக்கள் முடிமேலும் இருதயத்துக்கருகி லும் பூனுபவய்ை, எவ்விடத்து வைத்தாலும் அவ்விடத் துக்குப் பெருமை தருபவய்ை இறைவன் விளங்குகிருன்.

மறைக்காடு எப்படி இருக்கிறது? அது கடற்கரையில் உள்ள ஊர்: கடற்கரை வியாபாரம் நடந்த இடம். கடலில் யானேகள் வந்து இறங்கும். கஜாந்த ஐசுவரியம் என்று வளப்பத்துக்கு யானையைத் தல்ை எல்லையாகச் சொல்வது வழக்கம். யானே வந்து இறங்கும் என்ருல் மற்ற ஐசுவரி யங்களைப் பற்றிச் சொல்ல வேண்டாம். புலவராகிய கபி லர் யானே வந்து இறங்குவதை அழகாகச் சொல்கிருர்.

கரைவரும், பின்னல் காலன் வருவான் என்று துன்பங் களை அடுக்கடுக்காகச் சொன்னவர் அதுபோலவே இங்கே வளமான பொருள்களை அடுக்கடுக்காகச் சொல்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/70&oldid=548491" இலிருந்து மீள்விக்கப்பட்டது