பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணி கொட்டும் ஞானக் கன்று

குழந்தைக்குக் கதை சொல்லும் பாட்டி அதன் மனத் திலே பல வகையான சித்திரங்களே உருவாக்குகிருள். அவள் கதை சொல்லும் பாணி அப்படி இருக்கிறது. "ஒரே ஒர் ஊரில் ஒரு ராஜா. அவன் மிகவும் அழகாக இருக் தான்” என்று ஆரம்பித்துக் கதை சொல்லுகிருள். அவள் கூறுகிற வர்ணனையினல் அந்த ராஜா மிகப் பெரியவன், மிக்க ஆற்றலுடையவன், மிகவும் அறிவாளி என்ற எண் ணங்கள் குழந்தைக்கு உண்டாகின்றன. அந்த எண் ணங்கள் உரு இல்லாமல் அருவாகக் குழந்தை மனத்தில் தங்குவது அரிது. அதன் மனத்தில் வானே முட்டும் உயர முள்ள ஓர் அரசன் கிற்கிருன் அவன் முடி சோதி விட்டு ஒளிர்கிறது. நுட்பமாக உள்ளவற்றுக்கு உருவம் கொடுத் துச் சொல்கிருள் பாட்டி குழந்தையும் அந்த உருவத் தைப் பெரிதாக்கித் தன் மனத்தில் வாங்கிக் கொள்கிறது. ராஜா என்ருல் மிக உயரமாகவும் பருமளுகவும் மக்ல போலவும் உள்ள உருவம் ஒன்றை அது கினேக்கிறது. ஆற் நல், அறிவு ஆகிய பெருமைகளேயெல்லாம் அந்தப் பிரம் மாண்டமான உருவமாகவே காணுகிறது. அப்படிப் பார்த்தால்தான் அதனுடைய இளைய மனத்துக்கு இவன் பெரியவன் என்ற உணர்ச்சி தட்டுகிறது.

ஒருவிதத்தில் மனிதசாதி குழந்தை நிலையில்தான் இருக்கிறது. நுட்பமான உண்மைகளை அறிவில்ை தெரிந்து கொள்ளமுடியாத நிலையில் பலர் இருக்கிருர்கள். அவர் கள் அறிவு அந்த நுட்பத்தை உணர்கின்ற கூர்மை படைக்கவில்லை. நுட்பத்திலும் நுட்பமான கடவுளேப் பற்றிச் சொன்னல் மக்களுடைய மனம் உடனே பற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/74&oldid=548495" இலிருந்து மீள்விக்கப்பட்டது