பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணி கொட்டும் ஞானக் கன்று 65.

கொள்வதில்லை. புலனுகர்ச்சிக்கு உட்பட்டவற்றை உணரத் தான் மனத்துக்கு ஆற்றலுண்டு. அறிவு கூர்மையானல் அவற்றின் கருவை ஒருவாறு உணரலாம்; கடவுள் தத்து வத்தின் நுட்பத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

கட்புலனுக்குத் தோற்றும் வடிவாகிய பெருமைதான். தெளிவாக யாவருக்கும் தெரிகிறது. வேறு வகையான பெருமைகளைச் சுட்டும்போது வடிவுடைய பெரிய பொருளே உவமை யாக்கியோ அதுவாக உருவகப்படுத்தியோ சொல் லுவது கவிஞர்கள் வழக்கம். உலக வழக்கிலும் சில சமயங் களில் அதைக் காணலாம். - .

'மலே போல நீ இருக்கிறபோது எனக்கு என்ன பயம்' என்று ஒரு நண்பனைப் பார்த்து மற்ருெரு நண்பன் சொல்கிருன். அவன் பேராற்றலுடையவன் என்பதையே அந்த உவமையால் கினைக்கிருனே யன்றி, மலேயைப் போலப் பெருத்த உடம்பை உடையவன் என்று எண்ணு வதில்லை. கடல் போன்ற அறிவு என்று சொல்லும்போது, இத்தனை மைல் நீளம், இத்தனை மைல் அகலம் என்ற ட்ேடலளவையைக் கருதுவதில்லை. பரந்த அறிவு என்ற் நுட்பமான அளவைக் கண்ணுல் பார்க்கும் வடிவத்தின் அளவைச் சொல்லி உணர வைக்கிருேம். கவிஞர்கள், 'மல்லல் மலேயனேய மாதவர்', 'கருணைமா கடல்' என்று சொல்லுவதும் நுட்பமான பொருளைப் பருப் பொருளால் உணர்த்தும் உத்தியைச் சார்ந்ததே யாகும். .

விநாயகர் பேராற்றல் உடையவர்: பெருங் கருணை யுடையவர். அவர் சிவபிரானுக்குக் குழந்தைதான். ஆனல் நமக்கெல்லாம் மிகமிகப் பெரிய கடவுள். கடவுட் குழந்தை யாகிய அவருடைய விளையாடல் அவருடைய ஆற்றலுக்கு ஏற்றபடி அமையும். பசுவின் கன்று துள்ளி ஓடுவதற்கும்.

5 - - r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/75&oldid=548496" இலிருந்து மீள்விக்கப்பட்டது