பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. ஒன்றே ஒன்று

யானேக்குட்டி ஓடி ஆடுவதற்கும் வேறுபாடு உண்டு. யானேக்குட்டி ஒடிஞல் கிலம் அதிரும்.

விநாயகராகிய யானேக்குட்டி விளையாடுகிறது. நாம் காணும்'யர்னேக் கன்றைப் போலவா விநாயகர் இருப்பார்? அவர் மிகமிகப் பெரியவர்; மலேபோன்றவர்.

குழந்தைகள் இரண்டு கைகளையும் தட்டி விளையாடும். அதைச் சப்பாணி கொட்டுதல் என்று சொல்வார்கள். சப் பாணிப் பருவம் என்று பிள்ளைத் தமிழில் ஒரு பருவ வரு ணனை வரும், விநாயகர் சப்பாணி கொட்டுகிருர், அந்த ஓசை உரமான ஓசை வெடி வெடித்தால் கிலம் அதிர் கிறது. பேராற்றலுள்ள விநாயகர் சப்பாணி கொட்டும் போதும் அப்படியே நிலம் துளங்குகிறது. கிலத்தின் நடு வாக உயர்ந்து கிற்கும் சலனமற்ற மேருமலேகூடச் சலனம் அடைகிற்து. வானுலகே அதிர்கிறது.

விகாயகர், கை பெரிது; அவற்ருல் சப்பாணி கொட் டினல் பலத்த ஓசை கேட்கும் என்று சொல்வதைவிட அப் புடிக் கொட்டியதால் விளையும் விளவைச் சொன்னல், அந்த யானையின் பலம் தெளிவாகும்.

அதிர வடிகள் என்ற அடியவர் விநாயகருடைய ஆற்ற அலச் சொல்ல வருகிருர். அவர் சப்பாணி கொட்டும்போது நிலந்துளங்கியதாம்; மேரு கடுங்கியதாம்; அகன்று உயர்ந்த

வானம் அதிர்ந்ததாம்.

நிலம்துளங்க, மேருத் துளங்க, நெடுவான்

தலம்துளங்கச் சப்பாணி கொட்டும். - பூமி அகிரவும், மேருமலை நடுக்கவும் உயர்ந்த வானமாகிய இடம் கடுங்கவும் சப்பாணி கொட்டுவான். துளங்க கடுங்க.

பூமி, அதன் அச்சு. வானம் இவை துளங்கில்ை இவற் றினூடே உள்ள எல்லாப் பொருள்களும் அசையாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/76&oldid=547914" இலிருந்து மீள்விக்கப்பட்டது