பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணி கொட்டும் ஞானக் கன்று 6?

நிற்குமா? அவையும் அசையத்தானே வேண்டும்? விநாயகர் ஆடினல் உலகமே ஆடும் என்று சொல்வதன் விரிவே இது.

★ - விநாயகர் யார்? அவர் குழந்தை; அன்பர்களுடைய உள்ளத்திலே கலந்து இடங்கொள்ளும் குழந்தைத் தெய் வம். குழந்தை என்றவுடன் யாருடைய குழந்தை என்ற கேள்வி எழுவது இயற்கை சிவபெருமான் பெற்ற கன்று அவர். அவர் எத்தகையவர் என்பதைச் சுருக்கமாகச் சொல்லுகிருர் ஆசிரியர். அந்தச் சுருக்கத்திலும் ஓர் உண்மையைப் புலப்படுத்துகிருர். - ... . . . .

...சிவபெருமானுக்குப் பிள்ளேயென்று சொல்லும் போது, சிவபிரான் தந்தை, உமாதேவியார் தாயார், விநாயகர் அவ் விருவர்களுக்கும் பிறந்தவர் என்ற புராணக் கதை கினேவுக்கு வரும். உலகில் பிள்ளேயென்றவுடன் தாய்தந்தையருடைய கினேவு வருவது இயற்கை ஒருவன் ஒருத்தியை மணந்து அவளுடன் காம இன்பம் நுகர்ந்து பிள்ளையைப் பெறுகிருன்.

விகாயகரை இறைவன் பெற்ருன் என்ற கதை, உலகத் துப் பிள்ளைப் பேற்ருேடு சார்ந்தது அன்று. பிள்ளே தாய் தந்தையர் பெற்ற காம இன்ப நுகர்ச்சியின் விளைவு. கர்ம இன்பம் இன்றிப் பிள்ளைப் பேறு இல்லை. இது உலக இயல். ஆனால், சிவபெருமான் விநாயகரைப் பெற்ருன்! என்ருல், அதற்கு முன் அவனும் காம இன்ப்த்தை நுகர்ங் தான் என்று உலகியலோடு சார்த்தி எண்ணக்கூடாது. இப்படிச் சொல்வனவுெல்லாம் சில நுட்பமான உண்மை களுக்கு உருக்கொடுத்துச் சொல்லும் முறையைச் சார்க் தவை, சிவபெருமான் என்பது பரம் பொருளைக் குறிக்க வழங்கும் பெயர். அப்புரம் பொருளோடு இணைபிரியாமல் இருக்கும் அருளே உமாதேவியார். இறைவன் தன் அருளே வெளிப்படுத்தி உயிர்களுக்குப் பயன்படும். பொருட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/77&oldid=548497" இலிருந்து மீள்விக்கப்பட்டது