பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T2 . ஒன்றே ஒன்று

வனிடம் நேரே சொல்ல முடியுமா? அவன் அமரராலும் அணுகுவதற்கு அரியவன். அவளோ கண்ட இடத்துக்கு நாலுபேர் காணச் சென்று தன் காதலே உரைக்க முடியாத படி நாணம் என்னும் கவசம் பூண்டவள்.

ஆளுலும் அவனேக் கண்டு களிக்கவேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் மிகுதியாகிக்கொண்டே வந்தது. தக்க வண்ணம் அவளுடைய கிலேயைச் சொல்லி இறைவ லுடைய அருளுக்கு உரியவளாக அவளேச் செய்ய யாரும் முன்வரவில்லை. அவனுடைய திருவருளுக்கு உரியவளா வது கிடக்கட்டும்; அவனேக் கண்ணுரக் கண்டு இன்புற வாவது ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்கி நிற்கிருள். ஒரு முறை கண்டு காதல் கொண்டாள். அவன் அழகுரு வத்தை உள்ளத்தே எழுதிப் பார்த்துப் பார்த்துக் களிக் கிருள். ஆனாலும் அந்த உருவம் மங்காமல் இருக்க அடுத் தடுத்துப் புறக்கண்ணுலும் பார்ப்பது அவசியம். கண்ணுற் காணக் காணத்தான் கருத்துக்குட் புகுந்த உருவம் கன்ரு கப் பதிந்து கிற்கும்.

அவனை எப்படிக் காண்பது? தேவரீர் இங்கே எழுந் தருள வேண்டும்” என்று சொல்ல முடியுமா? -

அவனே முதலில் கண்டபோது இருந்த கோலத்தை அந்த இளம்பெண் கினைத்துப் பார்க்கிருள். என்ன அழகு! அவன் விடையின்மேல் ஊர்ந்து வந்தான். இதை கினைத்த வுடன் அவளுக்கு ஏதோ ஒரு குறுக்கு வழி கிடைத்துவிட் டது போன்ற கம்பிக்கை உதயமாயிற்று. அவனத் தன் மேல் ஏற்றிக்கொண்டு வரும் ஆனேற்றைப் பற்றியே அவ்ஸ் கினேவு படர்ந்தது. அது இறைவனைத் தாங்கி எந்த எந்த இட்ங்களிலோ செல்கிறது. அது மனசு வைத் தால் இந்தத் தெருவின் வழியே வரலாம். விடை வந்தால் அதன்மேல் இறைவன் வ்ருவான். இந்த வீதி வழியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/82&oldid=548502" இலிருந்து மீள்விக்கப்பட்டது