பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருக்தேன் 77

மருந்து உண்டு. ஆனல் மற்ற மருந்துகளே உண்பது போல் உண்பது அன்று அது. அந்த மருந்து கசக்காது: புளிக்காது; இனித்திருக்கும்; மிகமிக இனித்திருக்கும்: தேனைப் போல இனிமையாக இருக்கும்.

தேனே உண்டு ஊனே நீக்க வழி உண்டென்ருல் அதை எல்லோருமே எளிதில் பயன்படுத்திக்கொள்ள லாமென்று தோன்றுகிறது. ஆனல் அந்தத் தேனில் மக்க ளுக்கு நம்பிக்கை பிறப்பதில்லை. கண்ணுலே கண்டு கையாலே வாங்கி காவினலே சுவைத்து உண்ணும்படி இருக்கவேண்டும்; அப்போதுகூட நம் கையில் தானே வந்து விழவேண்டும். அப்போதுதான் தேனேயே நாம் உண்போம். அத்தனை சோம்பல்! -

இந்தத் தேனே காவில்ை சுவைப்பதற்குரியது அன்று. அறிவினல் சுவைப்பது இது. எண்ணி எண்ணிச் சுவைத்து இன்புறுவதற்கு உரியது. - . . .

'செய்வதைவிட எண்ணுவது மிகவும் எளிதா யிற்றே!” என்று நினைக்கலாம். கம்பிக்கையும் அன்பும் கொண்டு எண்ணுவது அவ்வளவு எளிதன்று. உள்ளத் தால் அந்தத் தேனே மொண்டு உண்ணவேண்டுமென்று அதை நுகர்ந்தவர்கள் சொல்கிருர்கள். அதனல் பயன் பெற்ற பெரியவர் ஒருவர் தம்முடைய அநுபவத்தைச் சொல்கிருர், ப்ட்டினத்துப் பிள்ளையாரே அந்தப் பெரியவர். . . - *.

இந்த உடம்பில் இருந்துகொண்டே அவருக்கு உறுதி யான கம்பிக்கை உண்டாகிவிட்டது. "வறுமை, நோய், பகை என்பவற்ருல் வருந்துகிருேம், எல்லாம் இந்த உடம்பை எடுத்ததல்ை உண்டாவன. இனிமேல் இந்த உடம்பே எனக்கு இல்லே' என்று அவர் நம்பினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/87&oldid=548507" இலிருந்து மீள்விக்கப்பட்டது