பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - ஒன்றே ஒன்று

'நீங்கள் இப்போது எடுத்த உடம்பைக் கழிக்க வேண்டாமா?" -

“ஆம்; மற்றவர்களைப் போல மறுபடியும் பிறப்பதற் காக இறப்பது அன்று அது விடுதலே பெறும் இன்பம் அல்லவா இந்த உடம்பை விடும்போது உண்டாகும்? இறக் தும் பிறந்தும் வருந்தும் வருத்தம் எனக்கு இல்லை.” வருந்தேன் இறந்தும் பிறந்தும். "இறந்த பிறகு பிறக்காமல் இருப்பது இருக்கட்டும். வாழுகின்ற இப்போது உடம்போடுதானே இருக்கிறீர்கள்? ஐம்புலன்களால் அலேப்புண்டு துன்புறும் இயல்புடைய தல்லவா இந்த உடம்பு? பாம்புப் புற்றில் இருக்கும்வரைக்

கும் பாம்புக்குப் பயப்படவேண்டியதுதானே?"

'பாம்பு கடித்தாலும் கஞ்சு எருத மருந்தை உண்டு விட்டால் பாம்பினல் நாம் சாவமாட்டோம். ம்ே உடம்பிற் புகுந்த நஞ்சு செத்துவிடும். புலன்கள் மயக்க அவற்றின் வழியே சென்று பாவங்களை ஈட்டி அதன் விளைவாக கரகம் புகுந்து துன்புறுபவர்கள் பலர் இருக்கிருர்கள். நான் அந்தத் தேனை உண்ட பிறகு இந்த உடம்பில் இருக்கும் போதே என் கிலே மாறிவிட்டது. ஐம்புலன்களின் சேட்டை கள் அடங்கிவிட்டன. அவற்ருல் என்ன மயக்க இயலாது. அவற்றின் வழியே நான் சென்று பொருந்தமாட்டேன் ஆதலினல் நரகிலும் புகமாட்டேன்.” - r

மயக்கும் புலன்வழிபோய்ப் பெர்ருந்தேன்; நரகிற் புகுகின்றிலேன். - 'அவ்வளவு சிறப்பான தேன் எங்கே இருக்கிறது? அதைப்பற்றி யாரும் சொல்லவில்லையே!” -

'அந்தத் தேனே அறிந்தவர்கள் புகழ்ந்து சிறப்பித் திருக்கிருர்கள். அன்புடையவர்களுக்கு அந்தத் தேனைப் பற்றிய புகழ் தெரியவரும். நமக்கும் அதற்கும் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/88&oldid=548508" இலிருந்து மீள்விக்கப்பட்டது