பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருக்தேன் 79.

சம்பந்தம் என்று ஒட்டாமல் இருப்பவர்கள் அதன் அருகில் இருந்தாலும் அதன் பெருமை தெரியாது."

"யார் அதைப் புகழ்ந்திருக்கிருர்கள்? அது எங்கே , , இருக்கிறது?" -

"அது திருவிடைமருதூர் என்ற தலத்தில் இருக்கிறது; மருத மரத்துக்கடியில் உள்ள பெரிய தேன் அது; புகழ் பெற்ற தேன். .

'அந்த இடைமருகில் ஆனந்தத் தேன் இருந்த

பொங்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ? - என்று மாணிக்கவாசகர் அதைப் புகழ்ந்திருக்கிருர், அவர் புகழ்ந்திருப்பதைக் கண்டு நான் அந்தத் தேனை அடைக் தேன்; முகந்துகொண்டு உண்டேன்."

. புகழ் மாமருதிற் பெருந்தேன் முகந்துகொண்டு உண்டு. "அது நாவினலே உண்ணும் தேனப் போல இருக் குமா? அதன் சுவை எப்படி இருக்கும்?"

"அது இன்னபடி இருக்கும் என்று சுட்டிச் சொல்ல முடியாது. உடம்பெல்லாம் தித்திக்கும்; உளமெல்லாம் தித்திக்கும்; உயிரெல்லாம் இத்திக்கும். அப்படிச் சொன்ன லும் விளங்காது. ஒன்று சொல்லலாம். அதை உண்ட பிறகு வேறு ஒன்றிலும் விருப்பமே உண்டாகவில்லை. புலன்களால் எதை உண்டாலும் அத்தகைய நிறைவு உண்டாவது இல்லை. அதை முகந்துகொண்டு உண்ட பிறகோ ஒரு நிறைவு உண்டாகிவிட்டது. வேறு எதிலும் ஆசை இன்றி இருக்கிறேன்.”

பிறிதுஒன்றில் ஆசையின்றி இருந்தேன். “நிறைவு உண்டாயிற்று. . என்ருல் @ಪಗಿ எந்தப் பொருளும் உங்களுக்கு வேண்டியது இல்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/89&oldid=548509" இலிருந்து மீள்விக்கப்பட்டது