பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - ஒன்றே ஒன்று

தருளியிருக்கிருன். மருது என்பதே கிருவிடைமருதூரைக் குறிப்ப தாகவும் கொள்ளலாம். பிறிது - வேறு.) -

திருவிடைமருதுரர் சோழநாட்டில் உள்ள தலம். மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட தலங்களில் முக்கிய மானவை மூன்று. வடக்கே சைலம் ஒன்று; அதற்கு மல்லிகார்ஜுனம் என்று பெயர். அர்ஜுனம் என்பது மருதமரத்திற்குப் பெயர். அது மேல் உள்ள மருதுரர். தெற்கே திருப்புடை மருதூர் என்று பாண்டி காட்டில் ஒரு தலம் உண்டு; அதைப் புடார்ஜுனபுரம் என்று வடமொழி யில் சொல்வார்கள். அது கீழ் உள்ள மருதுரர். நடுவில் இருப்பதஞ்ல் இதற்குத் திருவிடைமருதூர் என்ற பெயர் வந்தது. மூன்று மருதூர்களில் இது இடையில் இருப்பது. வடமொழியில் இதற்கு மத்தியார் ஜுனம் என்ற திரு காமம் வழங்கும். இங்குள்ள இறைவன் திருநாமம் மகா லிங்கம். மருதப்பன் என்பதும் ஒரு பெயர். அம்பிகையின் திருகாமம் பெருமுலே நாயகி, பிருகத்குசாம்பிகை என்று வடமொழியில் வழங்கும்.

இந்தப் பாட்டு, திருவிடைமருதூர் மும்மணிக் கோவை யில் மூன்ருவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/92&oldid=548512" இலிருந்து மீள்விக்கப்பட்டது