பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே விளையும் ?

பதினுேராக் திருமுறையைத் தொகுத்த நம்பியாண் டார் கம்பிகளுக்குத் திருஞான சம்பந்தப்பெருமானிடத்தில் அளவிறந்த பக்தி. அப்பெருமானப்பற்றி ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை, ஆளுடையபிள்ளே யார் திருவுலாமாலை, ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத் தொகை என்று ஆறு நூல்களை இயற்றியிருக்கிருர், பல பல வகையில் அவருடைய புகழை எடுத்துப் பாராட்டி யிருக்கிரு.ர்.

தமிழில் அகப்பொருள் அமைந்த பாட்டைச் சிறப் பாகச் சொல்வார்கள். தமிழுக்கே உரியவை அவை என் றும் சொல்வது உண்டு. நாயக நாயகி பாவத்தில் பாடிய பாடல்கள் மற்ற மொழிகளிலும் உண்டு. அவற்றில் பாட்டுடைத் தலைவனேயே பாட்டில் வரும் நிகழ்ச்சிக்குரிய வகை வைத்துப் பாடியிருப்பார்கள். நிகழ்ச்சியில் வருபவ கனக் கிளவித்தலைவன் என்று கூறுவது மரபு. பாட்டுடைத் தலைவனேயே கிளவித் தலைவகை வைத்துப் பாடிய பாடல்கள் தேவாரம், திவ்யப் பிரபந்தம் முதலிய வற்றில். இருக்கின்றன. அவை அகத் துறையைச் சார்ந்தன அல்ல. புறத்துறையில் ஒரு சிறந்த தலைவனப் புகழும் முறையில் அவை ஒருவகை; பாடாண்திணையைச் சார்ந்தவை. - - பாட்டுடைத் தலைவனை வேருகவும், கிளவித்தலைவனை வேருகவும் வைத்துப் பாடுவதே அகப்பாட்டு. சங்க காலத்து அகத்திணை நூல்களில் உள்ள எல்லாப் பாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/93&oldid=548513" இலிருந்து மீள்விக்கப்பட்டது