பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. ஒன்றே ஒன்று

யும் மானும் தினக்கதிரை அணுக வொட்டாமல் இவள் ஒட்டுவாள் என்றல்லவா நினைத்திருக்கிருர்கள்? ஆனல் அதற்கு நேர்மாருக, இவள் இருப்பதனால் அவை கூட்டம் கூட்டமாக இங்கே வரும்படியல்லவா ஆகிவிடும்? என்ற எண்ணங்தான் அது.

அது எப்படி?

மயில் வராமல் காக்க வேண்டியது தலைவியின் கடமை. அவளே மயிலைப் போல இருக்கிருள். அவளேக் கண்டு, "இதோ ஒரு மயில் இருக்கிறதே! நம் இனம் இருக்கும் இடத்தில் என்ன பயம்?' என்று எண்ணி மயில்கள் அந்த இடத்தை விட்டுப் போகாமல் கின்றுவிடுமே !

புனமா மயில்சாயல் கண்டுமுன்

போகா. . (புனம் - ಹT® FTLಳು - மென்மை.) -

அடுத்தபடி கிளிகள் கதிர்களைக் கொத்திக்கொண்டு. போய்விடும். அவற்றை வராமற் செய்யவேண்டும். ஆனல் அவள் வாய்கிறந்து பேசில்ை அறிவுடைய மனிதர்களே கிளியென்று ஐயுறுவார்கள். அப்படி இருக்க, அங்கே வரும் கிளிகள் கேட்டால், “இங்கே நம்முடைய இனத்தைச் சேர்ந்த கிளி இருக்கிறது" என்று எண்ணி அந்த இடத்தை விட்டுப் போகாமல் இருக்கும்.

கிளி பிரியா. -

பறவை இனங்கள் இருக்கட்டும். மலேப்பக்கத்தில் ஒடி யாடித் திரிகிற மான்களும் தினக்கதிரைத் தின்று விளைவை அழித்துவிடும். அவள் விழிக்கிற விழியைப் பார்த்தால் மானேப் போலவே இருக்கிறது. மான்களும் அந்த விழி யைக் கண்டு தம் இனமென்றெண்ணிப் போகாமல் இருந்து ഖ്ഥ ! - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/96&oldid=548516" இலிருந்து மீள்விக்கப்பட்டது