பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஒன்றே ஒன்று

கனமா மதிற்காழி ஞானசம் பந்தன் கடமலைவாய்த் தினம்ாது இவள் காக்க எங்கே

விளையும் செழுங்கதிரே?

(காட்டில் உள்ள பெரிய மயில்கள் இவள் சாயலைக் கண்டு இவளும் தம் இனம் என்று எண்ணிப் போகா. கிளிகள் இவள் மொழியைக் கேட்டுத் தம் இனம் என்றெண்ணிப் பிரிந்து செல்லா. கூட்டமான மான்கள் இவள் விழி தம் விழியை ஒக்கும் என்றும் தம் இனம் என்றும் எண்ணி இவ்விடத்தைவிட்டுப் போகா பெரிய நிலவுலகத்தில் பெருமையையுடைய மதில் சூழ்ந்த சீகாழியில் திருவ வதாரம் செய்த கிருஞான சம்பந்தனுக்குரிய காட்டையுடைய மலை .யினிடத்தில், மாதாகிய இவள் காவல் புரியத் தினையில் எங்கே வளப்பமுள்ள கதிர் விளையும்? -

புனம் - காடு; கினைப்புனமுமாம். கனம் என்பதைக் காழி .யுடன் சேர்த்தும் சொல்லலாம். கடம் - காடு. மாது காக்கத் கினையில் கதிர் எங்கே விளையும்? எங்கே என்பது எப்படி என்ற

பொருளில் வந்தது; எங்ஙனம் என்பதைப் போல.)

இது அகப் பொருளில் குறிஞ்சித்திணையைச் சார்ந்த பாட்டு. களவுக் காலத்தில் பகற் குறியில் தலைவியைக் கண்ட தலைவன் தன் நெஞ்சோடு சொல்லியது. r

ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவையில் இருபத்தேழாவது பாட்டு இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/98&oldid=548518" இலிருந்து மீள்விக்கப்பட்டது