10
ஒய்யாரி
அவன் அசட்டுச்சிரிப்பு சிரித்து நின்றான். அவள் என்ன நினைத்துக்கொள்வாளோ, கன்னா பின்னாவென்று நாம் எதையாவது கேட்டு வைக்கப்படாது என்ற கலவர நிலைதான் அவனை ஆட்கொண்டிருந்தது,
அவன் நிலையைப்புரிந்து கொள்ள அவளுக்கு எவ்விதச் சிரமமுமில்லை. அதனால் ஒருவிதமாகப் பார்த்து ஒய்யாரமாகச் சிரித்துவிட்டு ‘நமஸ்காரம்’ என்று சொல்லி நடந்தாள் அவள், மறைந்தாள்,
ஆனால் அவன் நினைவிலிருந்து அல்ல!
3
ஒய்யாரி மோகினியைப்பற்றி வாசுதேவன் முன்பெல்லாம் மணிக்கு முப்பது தடவைகள் எண்ணியும் பேசியும் வந்தானென்றல், இப்போது மணிக்கு ஐம்பது தடவைகள் அவள் எண்ணம், பேச்சு, கனவு இவைகளிலே ஈடுபடுவது சகஜமாயிருந்தது. மோகினிதான் இப்போதெல்லாம் அவனைக் கண்டதுமே சிரித்து ‘நமஸ்காரம்’ என்று கரம் குவித்துக் கைவளைகளை கலகலக்கவிட்டு நடனமிட்டு நடந்து செல்லது வழக்கமாயிற்றே! பின் அவளைப்பற்றி நினையாமலிருப்பது எப்படி?
நாகரிக ஜவுளிக்கடைகளின் முகப்பிலே கண்ணாடிப் பெட்டிக்குள் கொலுவிருக்கும் பொம்மை போல, வேளைக்கொரு பகட்டாடை உடுத்து கர்வமாகத் திரிகிற மோகினியை மயக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அவன் தினமும் தன்னைச் சிரத்தையாகச் சிங்காரித்து அலைந்தான். அவளுக்கு அவன் கருத்து தெரியாமலா போகும்? மேலும் அவளுடைய லட்சியம் வேறு இருக்கத்தானே செய்கிறது!