பக்கம்:ஒய்யாரி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி 笼籍 இனிமேல் இவள் முகத்திலே முழிக்கப்படாது. இவள் பிறவியால் தேவடியாளாக இல்லாமலிருக்கலாம். ஆனுலும் விபசாரத்தை தொழிலாக-இல்லையெனில், லேயாக - வ்ளர்ப்பவள் தான். இவள் குலுக்கலினம் மினுக்குதலிலும் மயங்கி ஏமாந்தது தப்பு போன ரூபாய் தொலையுது. புத்தி கொள்முதல் கணக்கிலே ச்ேத்து விட வேண்டியது தான். இனி அந்த வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கக் கூடாது என்று சங்கல்பம் செய்து கொள்வான். அவனது பிரதிக்ஞைகள் - எவ்வளவு திடமான அடிப்படையில் உறுதிப்படுத்தப் பெறினும் - அல்பாயு ாைனவை தான். சில சமயம் அவற்றின் ஆயுள் ஒரு இரவு மட்டுமே. மறுநாள் காலையிலேயே நகாள் செய்து கொண்டு மோகினியைப் பார்த்துப் பேசி மகிழப் போய் விடுவான். அவளைச் சந்தித்துப் பேசி இன்புரு நாளெல் லாம் பிறவா நாள் தான் அவனுக்கு. அப்படித் தோன்றும். என்ன செய்வது-பழக்கம்! 'உனக்கு எதுக்கு இந்தத் தேவடியாத் தனம்? என்று கேட்க வேணும் என்ற எண்ணம் அவனுக்கு எழும். ஆனல் துணிவு கிடையாது. அவள் கன்னிடம் உண்மையான அன்பு கொண்டது போலவே பழகு கிருளே, எல்லோரிடமும் இவ்விதம் தான் நடந்து கொள்கிருளா? இதை எப்படி ஆராய்வது? வழி தெரி யாது. தன்னிடம் பேசிச் சிரித்து ஏமாற்றிப் பணம் விடுங்கி இளிச்சவாயா, போயிட்டு வா! என்று வழி காட்டிப் பின் மறு நாளும் வந்தியா மச்சான் பூ மணத் தோடு; கொடுக்க மாட்டியா பணம் எனக்கு என்று: பசப்பி மயக்குவது போல் தான் எல்லோரையும் ஏய்க் கிமுளா அல்லது மற்றவர்களிடம்... ...' அவள் வாழ்க்கையை அவன் புரிந்துகொள்ள முடி: வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/23&oldid=762477" இலிருந்து மீள்விக்கப்பட்டது