உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒய்யாரி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

ஒய்யாரி

ஆனால், ஊராருக்கு என்ன! அவனுடைய ‘அதிர்ஷ்டம்’ பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். அவர்கள் ஆவலோடு விசாரிப்பதற்கெல்லாம் அவன் பதில் சொல்லாமல் போகும்போது, அவன் வேண்டுமென்றே மறைத்து மழுப்புகிறான் என்று நம்பினார்கள்.


5

ங்கிருந்தோ வந்திருந்தாள் அந்த மோகினி. வந்து ஒரு மாதம் ஆவதற்கு முன்பே ஊர் முழுவதையும் மயக்கிவிட்டாள்.எல்லோரும் அவளைப் பற்றிப் பேசினார்கள். அழகு விமர்சனம் செய்தார்கள், ஆயினும் ஒருவருக்குக் கூட உண்மை புலனாக வழியில்லை.

அவன் வீடு தேடிப் போய் வந்தவர்களில் ஒன்றிருவர் அங்கு போவதை நிறுத்திவிட்டார்கள். ‘பெரிய ராங்கிக்காரி அவ, பண ஆசை பிடித்த பிசாசு’ என்று வசை பாடினார்கள். இவர்கள் கைப் பணம் அதிகம் காலியாகி விட்டது; எனினும் இவர்கள் எதிர்பார்த்து ஏங்கி எதற்காக ஓடினார்களோ அந்த இன்பம் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால் தான் சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும் என்று பேசிய நரித்தனம் பயில்கிறார்கள் இவர்களும் என்று விரிவரை கூறினர் சில அதிகப்பிரசங்கிகள்.

மோகினி புராணம் பரபரப்பை உண்டாக்கும்படியாக ஒரு சம்பலமும் நிகழ்ந்தது. அவள் வீட்டுத்து விஜயம் செய்து வந்து பெரிய மனிதர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அது நடந்த தினத்தன்று தான் பெளர்ணமியும் கூடுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினான் பஞ்சாங்கதாசன் ஒருவன். அந்த விஷயத்தின் சூடு தணிவதற்கு முன்னதாக, அதற்குப் பதினைந்தாம் நாள் ஸ்ரீமான் ‘பட்டுலேஞ்சி’ பைத்தியம் பிடித்து விட்டது போல் நடந்து கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/24&oldid=1909050" இலிருந்து மீள்விக்கப்பட்டது