ஒய்யாரி
23
ஸ்ரீமான் பட்டுலேஞ்சி நாளைக்கு ஒரு பட்டு அங்க வஸ்திரம் போட்டுக் கொண்டு திரிவார். சும்மா சும்மா அதை இழுத்து விட்டுக் கொண்டு தனது அழகை தானே ரசித்தபடி நடப்பார். பிறரிடம் பேசும் பொழுது கூட அவரது கை கழுத்தை வளைந்து தொங்கும் லேஞ்சியிலே தான் விளையாடும். அதன் காரணமாக அவருக்கு ‘மிஸ்டர் வல்லாட்டு’ என்று பெயரிடலாம் என ஒரு பிரரேபணை வந்து, அது நன்றாக இல்லை; ஸ்ரீமான் பட்டுலேஞ்சி என்பது தான் நமது பண்புக்கு உகந்ததாக உள்ளது என்கிற வெட்டுப் பிரரேபணையால் தாக்குண்டு தோல்வியுற்றது.
அவர் மோகினி பக்தர்களில் ஒருவர். மோகினி வீட்டுக்குப் போய் விட்டு இரவு எட்டரை மணிக்குத் திரும்பும் போது தான் அவருக்கு மூளைக் குழப்பம் ஏற்பட்டது என்கிற சேதி பரவியது.
‘கவனித்தீர்களா? அன்று அமாவாசை’ என்றான் பஞ்சாங்கதாசன், பிரமாதமாக எதையோ கண்டுபிடித்து விட்டவன் போல.
‘ஆமா. அதனாலே என்ன?’ என்று எரிந்து விழுந்தார் ஒருவர்.
‘முதல் பலி பௌர்ணமி யன்று. இது நடந்தது அமாவாசை தினத்தில்’
‘சரிதான்டா, விஷயத்தைச் சொல்லாமல் பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு கொலம்பஸ்தனம் பண்ணப் பார்க்கியே! புதுசா என்ன கண்டுட்டே, சொல்லேன்’ என்று மண்டையிலடித்தார் அரைவெட்டு அறிஞர் ஒருவர்.
தோழர் பஞ்சாங்கம் அருள் புரிந்தார்: ‘நான் என்ன சொல்றேன்னா, பலிகளையும் நடந்த தினங்களையும் கவனிக்கும் போது அவள் பெண்ணல்ல. மோகினிப்