உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒய்யாரி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ஒய்யாரி

அவர் தான் முதன் முதலில், குலையாத ஆடைகளைச் சீருறுத்தி தூசி தட்டி, அங்க வஸ்திரத்தை அழகு படுத்தி கர்வமாக வீட்டினுள் விஜயம் செய்தவர் என்பது அவனுக்கு நினைவு வந்தது, சுய அழகை சிரத்தையாக கவனிக்கும் அவர் அவ்விதம் ஓடுவதன் வயணம்? அவன் பார்வை மோகினியின் அறை ஜன்னலின் பக்கம் பாய்ந்தது. பூத்திரை விலக்கிக் கிடந்த சாளரத்தின் இடைவெளி பயங்கரம் எதையும் காட்டவில்லை. மோகினிதான் பொங்கிவரும் சிரிப்பை அடக்க முடியாமல் கட்டிலில் கிடந்து புரண்டாள். சிரித்தாள். எதையோ நினைத்துக்கொண்டு மேலும் சிரித்தாள்.

அப்பொழுது உள்ளே போக விரும்பவில்லை அவன். இரவு வளர்ந்து வளர்ந்து இருளும் அமைதியும் அதிகமாகிற வேயிைலே அவளைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என்ற ஆசையுடன் வந்த அவன் குழம்பிய சிந்தனையோடு வந்த வழியே திரும்பினான். மோகினி வரவர பெரிய மர்மமாகவே—தீர்க்க முடியாத புதிராகத் தான்—வளர்கிறாள் என்றது மனம். அவன் கை சட்டைப் பைக்குள் விழுந்தது. அங்கு தூங்கி, விரல்களுக்கு ஜில்லென்று மென்மை உணர்ச்சி ஊட்டிய ரோஜாப்பூச் செண்டை எடுத்து, கசக்கித் தூர எறிந்து விட்டு வேகமாக நடந்தான். அன்று மாலையில் பிறந்து அவன் மனதில் குமிழிட்ட ஆனந்தமும் கிளுகிளுப்பும் பெருமணலில் படிந்த நீர்த் துளிகளாயின.


6

காமவல்லி மோகினி ஒரு கொல்லிப்பாவை. மோகித்து அருகணைபவர்களைக் கொல்லும் சக்தி பெற்றவள்; கொல்ல மனமில்லை யென்றால் பித்தனாக்கி விடுவாள். எண்ணி ஏங்கி மெலிந்து சாகும்படி செய்து விடுவாள் என்றெல்லாம் பேச்சு பிறந்தது ஊரிலே. அவளைப் பற்றி போலீசுக்கு ரிப்போர்ட் செய்தாலென்ன? வீட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/28&oldid=1906757" இலிருந்து மீள்விக்கப்பட்டது