ஒய்யாரி
27
டைச் சோதனை போடும்படி எழுதினாலென்ன? இவ்விதம் குயுக்தி வாதம் கிளப்பினார்கள்.
‘ருஜூ ஐயா ருஜூ? சட்டத்துக்குத் தேவையானது சரியான சாட்சியங்கள். சும்மா உங்களது ஊகங்களும் அளப்புகளும் கற்பனைகளும் கவைக்குதவாதன தெரியுமா? என்று கெக்கலித்தார். அரைவெட்டு அறிஞர். மேலும் போதித்தார். 'கழுதைகள் எக்கேடும் கெடட்டுமே! உமக்கும் நமக்கும் என்ன வந்தது? யாரய்யா இவனுகளை அவ பின்னாலே அலையச் சொன்னது? எலெக்ட்ரிக் லைட்டு நல்லாத் தானிருக்கு. தூரத்திலே நின்று பார்த்து ரசித்து விட்டுப் போயேன். யாரு உன்னை அது பக்கத்திலே போய் கம்பியிலே கை வச்சுப் பாரு தம்பின்னு சொன்னாக? இல்லை கேட்கேன். யாராவது சொன்னாகளா? பின்னே! நீயாப் போறே. ஷாக் அனுபவம் பெற்றால் அதுக்கு யாரு பழி? என்னய்யா நான் சொல்றது?’
அவர் சொல்வதற்கு எவரும் எதிர்த்துச் சொல்ல முன்வருவதில்லை. ‘கிடக்கான் அரை வேட்டு! சுத்த ஹெட்வெயிட்! இந்தத் தலைக்கனத்திடம் போய் வீணாக வாய் கொடுப்பானேன்’ என்று ஒதுங்கி விடுவார்கள். ஆமாமா, நீங்க சொல்றது சரிதான் என்று தலையாட்டி வைப்பர் சிலர்.
‘ஐயோ பாவம்! நம்ம மைனர் பிள்ளையாண்டான் நல்ல பையன்! அவனுக்கும் என்ன கதி வரப் போகுதோ?’ என்ற அனுதாபக்குரல் எழத் தொடங்கியது ஊரிலே.
ஊரில் உலவும் கருத்துக்களை ஒருவாறு மோகினி உணர்ந்திருந்தாள். ஆனால் பிறரது அபிப்பிராயங்களை அவள் மதிப்பதே கிடையாது. வழக்கம் போல் அந்திமந்தாரையாக வீதிகளில் அலைந்தாள். மஞ்சள் வெயில் நேரத்திலே மினுமினுக்கும் மோகினியாக குளக்கரையிலோ, கோயில் ஓரத்திலோ காட்சி தந்தாள். சில சமயம்