பக்கம்:ஒய்யாரி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姆 ஒய்யாரி 器墓 குள் தோழி, மோகினி அவளைப் பார்த்தாள். சிசித் திாள். நான் தானே! வர வேண்டியது தான், சீக்கிரமே வந்து விடுவேன்’ என்ருள். போதுமே எத்தனை நாளேக்குத் தான் அதுமாதிரி? என்று அவள் உரிமையோடு அலுத்துக் கொண்டு பேச வும், மோகினி ஜாக்கிாதையாக, தோழியின் உதடுகளில் தன் விரல் ஒன்றை வைத்து வாயடங்குச் சட்டம் பிறப் பித்தாள். உஸ்! இது தானே வேண்டாம்கிறது என் தங்கம் விளுகச் சிலுங்குவானேன்' என்று கேலியாகச் சொல்லி என்கத்தாள். ஆமா. குறைச்சல் இல்லே. இன்னும் இது மாதிரித் தான்னு சொன்ன, எனக்கும் இங்கேயே பக்கத் திலேயே தனி வீடு பார்க்க வேண்டியது தான்...' வாசுதேவனுக்கு அவர்கள் ஊடலையும் கின்று: கவனிக்க மனமில்லை. நான் பிறகு வாறேன்’ என்.: சொல்லி, மோகினியின் பதிலுக்காகக் காத்திராமனே வெளியேறினன். 7 காமினி ஒய்யாரியைப் பற்றி ஊரார்கள் மேலும் பரபரப்பான விவரங்களைப் பேசிப் பொழுது போக்க காலம் உதவி புரிந்தது. உள்ளூர்ப் பிரமுகர் பண்ணே யார்வாள் ஊரை விட்டே போய் விட்டார். எஜமான் உல்லாசமாக ஊர் சுற்றப் போயிருக்கிருர் என்று வீட் டார்கள் சொன்னர்கள். அவரது அவசரச் சுற்றுப் பிரயாணத்துக்கு அடிப்படைக் காரணம் அலங்காசியின் லீலை எதுவோ தான் என்ற சந்தேகம் மற்றவர்களுக்கு. 'ஜில் சதாரம் கதை உங்களுக்குத் தெரியுமா ஐயா ஜில் சதாரம்? அதிலே உபகதையாக இழையோடு கிறதே கித்தியகல்யாணி வரலாறு. என்று இழுத்தார் ஒருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/33&oldid=762488" இலிருந்து மீள்விக்கப்பட்டது