உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒய்யாரி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஒய்யாரி

பையில் கைபோட்டு அவன் வைத்திருந்த பணம் பூராவையும் எடுத்துக் கொண்டு, கொஞ்ச நேரம் சிரித்துப் பேசி மயக்கி, கன்னத்தைக் கிள்ளி அன்பாக வருடி முத்தமிட்டு, நைஸாக வெளியே அனுப்பி விட்டாள். திருப்தியுறாத அவன்மனம் தான் ஏமாந்து போனதை எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தது.

‘இந்தத் தேவடியாளுகளே இப்படித் தான். இப்ப நினைத்தாலும் கூட... ...’ எரிச்சலும் காரணமற்ற வெறுப்பும் தலைதூக்கி ஆடின அவனிடம். ஆனால், முன்னிருந்த பையனல்ல அவன். அனுபவ ஞானம் அதிகம் பெற முடிந்தது. வசதிகள் இருந்தன. முக்கியமாகப் பணமிருந்தது.

‘இருந்தும் என்ன செய்ய! ஒய்யாரி மோகினி ஏமாற்றிக் கொண்டு தானே இருக்கிறாள்!’ இதை நினைக்கவும் வேதனைப் பெருமூச்சு தான் வந்தது. இனி முடியாது. இதற்கு ஏதாவதொரு முடிவு கண்டு விடவேண்டியது தான். எத்தனை நாளைக்குத்தான் இளிச்ச வாயனாக இருப்பது? இம்முறை நிச்சயம் தான்... அவள் பசப்புகிற பசப்பு. நூறு ரூபாயைத் திருப்பித் தந்து விடுவாளாமே! ஹே, திருப்பித் தருகிறவளைப் பாருங்க. கள்ளி! இன்னும் பணம் பிடுங்காம லிருந்தால் போதாதா! சரி சரி, இனி பார்த்திடலாமே என்று வைராக்யத்தோடு தலையாட்டினான் வாசுதேவன்.

9

வாசுதேவன் மோகினியின் வீடடையும் பொழுது இரவு மணி ஏழு.

சிங்காரி ஜோராக டிரஸ் செய்து குஷியாக நாற்காலியில் சாய்த்து, கால்மேல் கால் போட்டு, ஒரு காலை உல்லாசமாக ஆட்டியபடி இருந்தாள். அவள் அணிந்திருந்த பட்டாடை தரையில் புரண்டு சிற்றலையென எழுந்து விழுந்து எழுந்தசைந்தது கவர்ச்சிகரமாக இருந்தது. அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/40&oldid=1909054" இலிருந்து மீள்விக்கப்பட்டது