பக்கம்:ஒய்யாரி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி 43 வில் ஏற்படுத்தப்பட்ட கடவுள், மதம், ஜாதி, கர்மம், பாபம் புண்ணியம், விதி, சொர்க்கம் நாகம் என்கிற மயக்குப் பேச்சுகள் பெரும்பகுதியினரை முதுகெலும்பற்றவர்க ளாய், கஷ்டப்பட்டாலும் மண்ணுேடு மண்ணுகக் கிடந்து பார்வையை ம்ட்டும் வானத்தை நோக்கி விட்டெறிந்து ஏக்க மூச்சை நீளவிடும் புழுக்களாக, அக்கிரமங்களையும், அகியாயங்களையும் எதிர்த்துப் போராடத் தெம்பற்றவர் களாக மாற்றிவிட்டன. அதே வேளையில் ஒரு சிலரை உல்லாசிகளாக, வீணர்களாக, வெறியர்களாக வாழவகை செய்திருக்கிறது. அவர்கள் மனதிலே ஈரமில்லை. அவர்கள் வாழ்விலே நேர்மையில்லை. கியாயமில்லை. அவர்களிடம் அன்பு இல்லை. அவர்களுக்கு இருப்பதெல்லாம் இரண்டு பித்துகள்-பணப்பித்தும், பெண் பித்தும்......இந்த உல கத்தில் ஆணுக ஏன் பிறந்தோம், பெண்ணுகப் பிறந்திருக் கக் கூடாதா என்ற எண்ணத்தைப் பலருக்கு உண்டாக்கு கிறது. பெண்கள் பெறுகிற கெளரவங்களும் அந்தஸ்தும் மதிப்பும், அவர்கள் அடைய முடிகிற வசதிகளும் சேர்ந்து. எங்கும் பெண் சுலபமாக வசதிகள் பெற்றுவிட முடிகிறது. அவள் சளுக்குக்காரியாக, காமவல்லியாக, கிரக்கடிக்கும் சரசியாகத் திரிந்தால் எத்தனையோ பேரை அடிமைப் படுத்தி தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள முடி கிறது. இதையெல்லாம் பார்த்தபோது நானும் ஏன் ஒய் பாரியாக நடிக்கக் கூடா தென்று கினைத்தேன்........ றுக்கே பேசாதே சந்தேகங்கள்-முடிவு வரை வில் ஏதாவது மிஞ்சி நிற்குமானுல்-பிறகு கேள்...நான் படித்தேன். வேலை பார்க்கத் தயாராக இருந்தேன். ஒரு வேலை கிடைத்தது. நான் செய்யாத தவறுக்காக எனக்குச் சீட்டு கொடுத்து அனுப்பிவிட்டார் முதலாளி. நான் பட்டினி கிடக்க நேர்ந்தது. என் மனைவியும் என் குழந்தைகளும்-அன்று வந்திருந்தார்களே. நீ தானே பார்த்தாய் அவர்களே. ஆனல் அப்பொழுது உனக்கு அவர்கள் யாரென்று புரிந்திராது-பட்டினி கிடந்தது உண்டு. அவர்களே எத்தனை காலம் என் மாமனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/45&oldid=762501" இலிருந்து மீள்விக்கப்பட்டது