பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

இருப்புச்சட்டியின் மீது தம் உங்ளங்கையை வைத்து அழுத்த வேண்டும். நல்லவர்கள் கைபடும்போது இருப்புச்சட்டி அசையாது. திருடியவர் கைபட்டவுடன் கூச்சலிட்டுக்கொண்டு குதித்தெழுந்து நிமிர்ந்துவிடும். இந்த மந்திர இருப்புச் சட்டியை இமயமலையிலிருந்து வந்த ஒரு தவ முனிவர் என்னிடம் கொடுத்துச் சென்றார். இதன் மூலம் நான் முப்பது திருட்டுக்களைக் கண்டுபிடித்திருக்கிறேன்" என்று சொன்னான். அறிவாளன் சொன்ன இந்தச் செய்தி அரண்மனை முழுவதும் பரவிவிட்டது.

அரண்மனையில் வேலை பார்த்த வேலையாட்கள் அறுபது பேரும் அறைவாசலில் வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். அறையின் மத்தியில் ஒரு மேசையின் மீது இருப்புச் சட்டி தலைகுப்புறக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. அறைச் சன்னல்கள் அனைத்தும் மூடி இருட்டாக்கப்பட்டது. கதவு திறக்கும்போது மட்டுமே உள்ளே மங்கலான வெளிச்சம் தெரிந்தது.

வேலைக்காரர்கள் ஒவ்வொருவராக அறைக்குள் சென்று வந்தார்கள்.

இருப்புச் சட்டி போடப் போகும் கூச்சலை எதிர்பார்த்துக்கொண்டு எல்லோரும் ஆவலோடு காத்திருந்தார்கள்.

ஒவ்வொருவராக அறைக்குள் போய் உள்ளங்கையால் இருப்புச் சட்டியைத் தொட்டுவிட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/21&oldid=1165198" இலிருந்து மீள்விக்கப்பட்டது